இச்சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென தம்பிதுரையை வெளியே அனுப்பிவிட்டு மோடியும் பன்னீர்செல்வமும் தனியே 20 நிமிடம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது சசிகலா தரப்பு தமக்கு தரும் நெருக்கடிகளை மோடியிடம் பன்னீர்செல்வம் விவரித்திருக்கிறார்.
அதே நேரத்தில் டெல்லியில் கோலோச்சும் தம்மை அதுவும் லோக்சபா துணை சபாநாயகராக இருக்கும் தம்மை வெளியே அனுப்பியதை தம்பிதுரையால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் ஓ பன்னீர்செல்வத்தின் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார் தம்பிதுரை.
தற்போது அமைச்சர்கள் சிலரே பன்னீர்செல்வத்துக்கு எதிராக சசிகலாவே முதல்வராக வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை பயன்படுத்திக் கொண்டு தம்மை அவமதித்த பன்னீர்செல்வத்தை பழிவாங்கும் வகையில் சசிகலாதான் முதல்வராக வேண்டும் என பகிரங்க அறிக்கை வெளியிட்டு கலகக் குரலை வெளியிட்டுள்ளார் தம்பிதுரை.
கட்சியும் ஆட்சியும் இருவேறு நபர்களிடம் இருக்கக் கூடாது என தம்பிதுரை கூறியுள்ளார். அதாவது பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தாக வேண்டும் என்பதை மறைமுகமாக வலியுறுத்தி தமது கோபத்தை தணித்திருக்கிறார் தம்பிதுரை.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.