ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் தற்போது தான் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கல் பண்டிகைக்குள் தீர்ப்பு வழங்க இயலாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் கோரினர். தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், இவ்விகாரத்தில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது என திட்டவட்டமாக கூறியுள்ளது தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல தீர்ப்பு வரும் முன் அவசர சட்டம் கொண்டு வர இயலாது என மத்திய அரசும் திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றமும் தற்போது விரைந்து தீர்ப்பு வழங்க முடியாது என கூறியுள்ளது. இதனால் சட்டரீதியாக அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்துவது இந்த ஆண்டும் கனவாகவே முடிந்து விடும் என்றே தெரிகிறது.
முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. உச்சநீதிமன்றத்தின் தடையால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் என மிகப்பெரிய எழுச்சியுடன் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.