January 9, 2017
எம்.எல்.ஏக்கள். எம்பிக்கள் தற்கொலை செஞ்சுக்கணும்..! ஆட்சியை கலைக்கணும்..! அமீா் ஆவேசம்..!
வறட்சியின் காரணமாக பயிர்கள் கருகியதால் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும் மாரடைப்பால் மரணமடைந்தும் உள்ளனர்.
இதனைத் தடுக்க சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற இயக்குநர் அமீர் விவசாயிகளின் தற்கொலையை தடுக்காத அரசை கலைக்க வேண்டும் என்று தெரிவித்துளார்.
இந்தப் போராட்டத்தை ஒரு சிறுபொறியாக நான் பார்க்கிறேன். இது இப்போதுதான் ஆரம்பமாகி இருக்கிறது.
முழுவதுமாக வெற்றி அடைந்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள அவல நிலை இது.
ஒரு உழவனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான போராட்டமாக இது உள்ளது.
இப்படி ஒரு போராட்டத்தை இளைஞர்கள் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
விவசாயிகள் தற்கொலைக்கு பொறுப்பேற்று அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.
விவசாயிகளை காப்பாற்றாத அரசு கலைக்கப்பட வேண்டும். மக்களுக்கான ஆட்சி இங்கு உருவாக்கப்பட வேண்டும்.
மக்களுக்கான ஆட்சி இங்கு உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை எம்பிகள், எம்எல்ஏக்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.
ஜாதிப் பிரச்சனை, மதப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்று விவசாயிகள் பிரச்சனைக்கும் முக்கியதுவம் கொடுக்க வேண்டும்.
வேளாண்மைதான் முதன் பிரச்சனை என்பதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
விவசாயிகளின் பிரச்சனை இப்படியே போனால் இந்தியா இன்னும் கொஞ்சம் நாட்களில் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை வரும் . இவ்வாறு அமீர் ஆவேசமாக கூறினார்.
எம்.எல்.ஏக்கள். எம்பிக்கள் தற்கொலை செஞ்சுக்கணும்..! ஆட்சியை கலைக்கணும்..! அமீா் ஆவேசம்..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 09, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.