Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 12, 2017

அத்தை ஜெ.,போன்று நானும் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்: தீபா எச்சரிக்கை



ஜெ.,அண்ணன் மகள் தீபாவை நாள் தோறும் ஏராளமான அ.தி.மு.க.,வினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் மதம் மாறி திருமணம் செய்து கொண்டார் என்ற குற்றசாட்டு எழுந்தது.
இது குறித்து அவர் கூறுகையில்,‘‘நான் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறேன்; கிறிஸ்தவராக மாறி விட்டேன் என, இப்போது சொல்லவில்லை. என் அத்தை ஜெயலலிதா இறந்த சில நாட்களில், நான், அவர் மரணத்தில் ஒளிந்து கிடக்கும் மர்மம் விலக வேண்டும் என சொல்ல ஆரம்பித்த, சில நாட்களிலேயே இப்படி, செய்தி பரப்பத் துவங்கி விட்டார்கள்.
அதுவும், நான், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, டிவிட்டர் மூலம் வாழ்த்து செய்து பதிவிட்டதும், பார்த்தீர்களா தீபா கிறிஸ்தவர்தான் என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும் என்றும் சொல்லத் துவங்கினார்கள்.
அப்போதே நான் சொன்னேன். நான், எல்லா மத பண்டிகைகளுக்கும், அந்த மதத்தை சார்ந்தவர்களுக்கு வாழ்த்து சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ரம்ஜான் நாளில், முஸ்லிம்களுக்கு வாழ்த்துச் சொன்னேன். உடனே, நான் முஸ்லிம் மதத்துக்கு மாறி விட்டேன் என சொல்ல முடியுமா? அரசியல் ரீதியில், நான், பலம் பெற்று விடக் கூடுமோ என்ற அச்சத்தில், சிலர் இப்படியெல்லாம் செய்தி பரப்புகின்றனர்.
அதிலெல்லாம் கவனம் செலுத்தி, அவர்களோடு மல்லுக்கட்டி, நேரத்தை வீணடிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் விருப்பத்தை, அந்த விஷயத்திலும் நான் நிறைவேற்ற மாட்டேன்.
என் கணவர் ஒரு கிறிஸ்தவர் என, இவர்களாக புதிய தகவல் சொல்கின்றனர். எதையோ ஒரு கதையை சொல்லிவிட்டு, அதற்கு, சப்போர்ட்டாக, சில விஷயங்களை பொய்யாக இட்டுக் கட்டுகின்றனர்.
நான் பொட்டு வைக்காதது, பெரிய குற்றமா என்ன? ஏற்கனவே, சிலர் என்னிடம் இது குறித்து சொன்னார்கள். இப்படிப்பட்ட விஷயங்களில் நான், தீவிர கவனம் செலுத்துவதில்லை.
பொட்டு வைத்தால், இந்து. இல்லாவிட்டால், கிறிஸ்தவரா? இப்படியெல்லாம் சொல்லி, ஒரு மதத்துக்குள் என்னை யாரும் அடக்க முடியாது. நான் எல்லா மதத்துக்கும் பொதுவான பெண். எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களையும் நான் மதிக்கிறேன்; இதில், எங்கள் அத்தை மாதிரிதான் நானும்.
இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல; அனைத்து மத இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் என்னை தொடர்ந்து சந்திக்கின்றனர். அவர்கள், நான், தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அப்படி நடந்தால், நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவோம் என்றும் கூறுகின்றனர். எது நல்லதோ, அதை கட்டாயம் செய்வேன் என்றுதான், அவர்களிடம் சொல்லி அனுப்புகிறேன்.
மற்றபடி, இந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டுமோ, அதை தீவிரமாக ஆராய்ந்து; யோசித்துதான் செய்வேன். யாருக்காவும் அவசரப்பட்டெல்லாம் எதையும் செய்ய மாட்டேன். மற்றபடி, என் குடும்ப விஷயமெல்லாம், வெளியில் இருப்பவர்களுக்குத் தேவையில்லை.
என்னை சந்திக்க வரும் தொண்டர்களை சிலர் மிரட்டுவதாக அறிகிறேன். மிரட்டியெல்லாம் யாரும் யாரையும் பணிய வைக்க முடியாது. நடப்பது, நல்லவிதமாக நடந்தே தீரும், ’’ என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.