January 24, 2017
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சா?… கவர்னருடன் பொன். ராதா ஆலோசனை! இதற்குத்தானே ஆசைப்பட்டாய்...பா. குமார....
மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கவர்னர் வித்யாசாகராவை இன்று சந்தித்தார், அப்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பற்றி விவாதித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் வன்முறையாக நேற்று மாறியது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆளுநர் வித்யாசாகர ராவை சந்தித்து விவாதித்துள்ளார்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நேற்று வன்முறையாக மாறியது. இதனால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தீ வைப்பு சம்பவங்கள், தடியடி என தமிழகம் வன்முறை களமாக மாறியது
இந்நிலையில், இன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவை நேரில் சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
மேலும், தமிழத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள், அது வன்முறையாக மாறியது மற்றும் தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து ஆளுநருடன் பொன். ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சா?… கவர்னருடன் பொன். ராதா ஆலோசனை! இதற்குத்தானே ஆசைப்பட்டாய்...பா. குமார....
Reviewed by மறத்தமிழன்
on
January 24, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 24, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.