Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 18, 2017

கொந்தளிக்கும் தமிழகம்.. போராட்டம் தீவிரம்.. டிஜிபியுடன் பன்னீர் செல்வம் ஆலோசனை



தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்ககோரி போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. 2வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது. நேற்று நடந்த போராட்டத்தை விட இன்று போராட்டம் மிகவும் தீவிரமாக உள்ளது.
தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் பங்கெடுத்து உள்ளனர். அதே போல பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர். தன்னெழுச்சியதாக நடைபெறும் போராட்டத்தால் தமிழகமே ஸ்தம்பித்துள்ளது.
இந்த நிலையில் போராட்டக்காரர்களின் கிளர்ச்சி தமிழக அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.  எனவே இதனை சமாளிப்பது எப்படி என்பது குறித்து முதல்வர் பன்னீர் செல்வம் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன்  ஆகியோருடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.