Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 17, 2017

ஜெ., தீபா புறப்பட்டார் : சூடாகும் அரசியல் களம் – பின்னால் இருந்து இயக்குபவர் யார்?



    இப்படி ஒரு சுற்றறிக்கை எல்லா மீடியாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அரசியல் களம் குறிப்பாக சசிகலா தரப்பு கொதித்துப்போய் கிடக்கிறது.
    தீபாவை பின்னால் இருந்து இயக்குவது டெல்லி தலைமையா அல்லது இங்கிருக்கும் பணபலம் பொருந்திய  அண்ணாச்சியா என்பதெல்லாம் போகப் போகத் தெரியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதோ அவர்களது அறிவிப்பு.
    17.1.2017 திருமதி தீபா அவர்களின் நிகழ்ச்சி நிரல்
    பெறுநர்
    அனைத்து செய்தி ஆசிரியர்கள் /தொலைக்காட்சி செய்தியாளர்கள்
    அன்புடையீர் வணக்கம்,
    மாண்புமிகு மறைந்த முன்னாள் முதல்வர் பாரத ரத்னா டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு நாளை 17.1.2017 காலை 6.30மணிக்கு தி.நகரில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கு திருமதி தீபா சென்று அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்துகிறார்.
    காலை 7.மணிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள தங்கத்  தலைவர் அவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி எதிர்கால திட்டம் குறித்து சபதம் எடுக்கிறார்.
    காலை 11 மணிக்கு தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார்.
    மாலை 4 மணிக்கு தி.நகர் இல்லத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து கூடியிருக்கும் தொண்டர்கள், ஆதரவாளர்கள் ஆ‌கியோ‌ரி‌ன் கருத்துக்களை கேட்டறிந்து அவர்களிடையே உரையாற்றி இனிப்புகள் வழங்குகிறார்.
    இதற்கு தங்களது நாளிதழ் /தொலைக்காட்சி சார்பில் நிருபர் புகைப்பட நிபுணர்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
    அதிகார பூர்வ அறிவிப்பு இது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.