Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 8, 2017

ஜல்லிக்கட்டுக்காக தமிழக நடிகர்கள் ஏன் போராடவில்லை?: டி.ராஜேந்தர் கேள்வி


மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை ஆதரித்து திரைப்பட இயக்குனர், டி.ராஜேந்தர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஜல்லிக்கட்டை நடத்திட வலியுறுத்தி, மதுரை அவனியாபுரம் அய்யனார் கோவிலில் திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் வழிபாடுகள் மேற்கொண்டு, அப்பகுதி மக்களிடம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
தமிழர்களின் வீர விளையாட்டையும் பாரம்பரியத்தை கூறி, தமிழகத்தில் மதுரையில் மட்டுமே உண்மையான மாடுபிடி வீரர்கள் உள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

ஜல்லிகட்டு போட்டியை நடத்துவதில் மெத்தனப் போக்கை கடைபிடித்து வரும் மத்திய, மாநில அரசுகள் மீது குற்றச்சாட்டு தெரிவித்தார். இந்த ஆண்டு தமிழகத்தில் தடையை உடைத்து ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் என டி.ராஜேந்தர் உறுதி கூறினார்.

தொடர்ந்து திருமங்கலம் அருகே கரடிகல்லில் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் டி.ராஜேந்தர் பேசும் போது, தமிழர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதால்தான் போராட்டத்தின் வாயிலாக ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி போராடி வருவதாக கூறினார்.

மக்களுக்கு கோபம் வந்தால் எதையும் சந்திக்கும் தைரியம் தமிழர்களுக்கு உள்ளதாகவும், ஜல்லிகட்டுக்காக தமிழக நடிகர்கள் ஏன் போராடவில்லை எனவும் கேள்வி எழுப்பினார். மத்திய அரசில் இடம்பெற்ற தமிழக அமைச்சர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட போதிய அழுத்தம் தரவில்லை எனவும் டி.ராஜேந்தர் சாடினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.