Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 31, 2017

ஓங்கி அறைந்த எம்எல்ஏ : ஜெ., இருந்தால் இது நடக்குமா? கண்ணீர் விடும் தொண்டர்கள்


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மனோரஞ்சிதம். இவர் இரண்டாவது முறையாக இந்த தொகுதியில் நின்று வெற்றிப் பெற்றுள்ளார்.
கடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில், கட்சியின் மாவட்ட பிரதநிதியான சக்திவேல் என்பவரை இரண்டு பேர் பிடித்து கொள்ள டேய் பொட்ட பையா? என்ன…? என்கிட்டையேவா…? என்று கட்சி நிர்வாகிகள் முன்பாக அசிங்கமாக  பேசி சட்டையை கிழித்து கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
எம்எல்ஏ அடித்ததற்காக நன்றி தெரிவித்து பரபரப்பாக தொகுதி முழுவதும் போஸ்ட்டர் அடித்து ஒட்டிவிட்டனர் அதிமுகவினர்.
என்ன காரணம் என்று தொண்டர்களிடம் விசாரித்தோம். இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்ற மனோ ரஞ்சிதம், கட்சி நிர்வாகிகளை தற்போது மதிப்பதில்லை. எலெக்சன் அப்போ எல்லோமே முதுகுல குத்துன பசங்க தாண்டா நீங்க. உங்க ஒரு பயலுக்கு கான்ராக்ட் கிடையாது என்கிறார். ஒன்றிய செயலாளர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட மொத்த கட்சிகாரங்களையும் ஓரம் கட்டி தனக்கு வேண்டிய அரவிந்தன், சக்தி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு மட்டும் 15 சதவிகித கமிஷன் வாங்கி கொண்டு கான்ராக்ட் கொடுத்து வருகிறார்.
பிடிஓ ஆபீஸ் பொது நிதியில் கூட எம்எல்ஏ கை வைச்சிட்டாங்க. கடுப்பான கட்சிகாரங்க எம்ஜிஆர் விழாவில் பொங்கிட்டாங்க.
அப்போது நிர்வாகி சக்திவேல் ஏகத்திற்கும் எகிறவே, கடுப்பான எம்எல்ஏ மனோரஞ்சிதம், சக்திவேலை விரட்டி விரட்டி அடித்துவிட்டார்.
இது குறித்து சின்னம்மாவிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவே அம்மா (ஜெ) இருந்து இருந்தால் இதெல்லாம் நடக்குமா…? என்று பேசி வந்த கட்சி தொண்டர்கள், எம்எல்ஏ மனோரஞ்சிதத்திற்கு நன்றி தெரிவித்து போஸ்டர் அடித்து தொகுதி முழுவதும் ஒட்டிவிட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.