January 2, 2017
இரட்டை இலைக்கு பதில் இரட்டை ரோஜா! கட்சி சின்னம் ரெடி!
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுள்ள நிலையில், திருச்சி, கோவை போன்ற இடங்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை அரசியல் வாரிசு தீபா என்று பேனர்கள் வைத்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் சசிகலா நடராஜன் தேர்வு செய்யப்பட்டு, கடந்த சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பேனர்கள் மற்றும் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு வருகிறது.
திருச்சியில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரித்து, ”தீபா தான் ஜெயலலிதாவின் உண்மை அரசியல் வாரிசு ”என்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த பேனரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு அடுத்து தீபாவின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
இதேபோல, கோவை கண்ணம்பாளையத்தில் அதிமுக தொண்டர்கள் 100 பேர் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து பேனர்கள் வைத்துள்ளனர். பேனர்கள் வைத்தவர்கள், ”ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு தீபா தான்” என்று கோஷம் எழுப்பினர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.
திருச்சி போன்ற சில இடங்களில், அதிமுக தொண்டர்கள் சிலர் தங்களது உச்சக்கட்ட நடவடிக்கையாக, தீபாவை முன்னிலைப்படுத்தி, ”இரட்டை இலை”க்கு பதிலாக ”இரட்டை ரோஜா” தாங்கிய பேனர்களை வைத்துள்ளனர். அரசியலுக்கு வாருங்கள் என தீபாவை அழைக்கும் வகையில் இந்த பேனர்களை தீபாவின் விசுவாசிகள் வைத்துள்ளனர்.
இதற்கிடையே, திருப்பூர் போன்ற இடங்களில் சசிகலாவின் பேனர்களை கிழித்தெரிந்தனர். தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் சசிகலா பொதுச்செயலாளராக தேர்வான பின்னர் வைக்கப்பட்ட பேனர்களில் இருந்து சசிகலாவின் புகைப்படத்தை மை வீசியும், சாணம் அடித்தும், கிழித்தும் எறிந்தனர்.
மேலும், கடலூரில் சசிகலாவுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் சிலர் கருப்பு தினம் அனுஷ்டித்தனர்.
இரட்டை இலைக்கு பதில் இரட்டை ரோஜா! கட்சி சின்னம் ரெடி!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 02, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.