January 17, 2017
கட்சிக்கு ஓட்டு இல்லை’ ‘நாங்களே தேர்தலில் நிற்போம்’ ஜல்லிக்கட்டிற்கு போராடும் மாணவர் சமுதாயம் ஆவேசம
ஜல்லிக்கட்டு நடத்த அலங்காநல்லூரில் தொடர்ந்து 24 மணிநேரம் போராட்டம் நடத்தி வந்த மாணவர்களை போலீஸார் இன்று காலை கைது செய்தனர். அதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் போராட்டம் நடத்திய மாணவர், மாணவியர் ஆவேசமாக தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் சில..
கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்கள் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யக் கூடாது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கவில்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.
குடியரசு தினத்தில் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவோம். அடுத்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் மாணவர்கள் ஓட்டு போடமாட்டார்கள். அன்னிய பொருட்களை வாங்க மாட்டோம். அடுத்த தேர்தலில் மாணவர்கள் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்துவோம். மாணவர்களை தலைவர்களாக தேர்வு செய்வோம் என கோரிக்கை வைத்தனர்.
தமிழகத்தில் எந்த ஒரு பிரச்சனைக்கும் இல்லாத அளவில் மாணவர்கள் ஒட்டு மொத்தமாக ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக திரண்டுள்ளனர். இது வருங்கால அரசியலில் பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வரும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.
கட்சிக்கு ஓட்டு இல்லை’ ‘நாங்களே தேர்தலில் நிற்போம்’ ஜல்லிக்கட்டிற்கு போராடும் மாணவர் சமுதாயம் ஆவேசம
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 17, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.