January 5, 2017
சசிகலா ஒரு வெத்து வேட்டு, அவருக்கு கால் காசு தகுதி கூட இல்லை! வெளுத்துவாங்கும் ஐ.பெரியசாமி
ஜல்லிக்கட்டு தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க, ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பெது செயலாளர் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுகிறார் என சசிகலா கூறியிருந்தார்.
இதற்கு, பதிலடியாக திமுக. துணை பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி எம்.எல்.ஏ, அதிமுக பொதுசெயலாளர் சசிகலாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்ட அறிக்கையை படித்து பார்த்தேன். அதில், “சட்ட பாதுகாப்புகளுடன் ஜல்லிக்கட்டு விளையாட்டை அதிமுக ஆட்சியில் நடத்தினோம்” என்று ஒரு வரி கூட இல்லை. இதுவே அவர்கள் ஜல்லிக்கட்டு விளையாட்டை பாதுகாப்பாக நடத்த முடியாமல் தவறிவிட்டனர் என்பதை நிரூப்பிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும், ஸ்டாலின் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் என்று தான் சொன்னார், இதை கூட புரிந்துக்கொள்ளாமல் சசிகலா நடராஜன் இவ்வாறு “வெத்து வேட்டு” அறிக்கையை வெளியிடுகிறார். இதை பார்க்கும் போது எங்கே முதல்வர் பன்னீர் செல்வம், ஸ்டாலினுக்கு பதில் கூறி அறிக்கை வெளியிட்டு விடுவாரோ என்ற அச்சத்தில் தான் சசிகலா இவ்வாறு அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று பெரியசாமி கூறினார்.
மேலும், ஜல்லிக்கட்டை நடத்த அதிமுக அரசு எந்த விதமான நடவடிக்கையையும் தற்போது வரை எடுக்கவில்லை. அதனால், தான் சசிகலா நடராஜன் கேளிவிக்கு பதிலளிக்காமல் , இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று பெரியசாமி மேலும் கூறினார். ஆகையால், வரும் நாட்களில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பு சசிகலா கூகுளை தேடி பார்க்க வேண்டும் என்றும் கிண்டலடித்துள்ளார்.
அல்லது முதல்வர் பன்னீஎ செல்வத்திடமாவது திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டு தெரிந்துக்கொள்ளுமாறு கூறினார். மேலும், திமுக ஆட்சி காலத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தனது அறிக்கையில் பட்டியலிட்டார். குறைந்தபட்சம் இதையாவது பத்திரமாக வைத்துக்கொண்டு, எதிர்காலத்தில் ஜல்லிக்கட்டு பற்றி அறிக்கை விடும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், திமுக ஆட்சியில் கொண்டு வந்த “ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சட்டத்தை” சரியாக நடைமுறைப்படுதாமல் திட்டமிட்டு அதிமுகவினர் கோட்டை விட்டனர். இதுதான், தமிழர்களின் வீர விளையாட்டான “ஜல்லிக்கட்டு” தமிழகத்தில் தடை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம். ஆகையால், ஜல்லிக்கட்டு விளையாட்டு இன்றைக்கு நடக்காமல் போனதற்கு முழு காரணம் அதிமுக அரசு தான் என்று பெரியசாமி குற்றம்சாட்டினார்.
மேலும், மக்களிடம் அனுதாபம் பெற ஸ்டாலின் ஜெயலலிதாவின் பெயரை கொச்சைப்படுத்துகிறார் என்று கூறுகிறார் சசிகலா. உண்மையில் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்துவது சசிகலா தான் என்று ஐ.பெரியசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஸ்டாலினைப் பார்த்து “கொச்சைப்படுத்தும் அரசியல்” செய்கிறார் என்று சொல்வதற்கு “கால் காசு தகுதி” கூட சசிகலா நடராஜனுக்கு இல்லை என்று இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார்.
சசிகலா ஒரு வெத்து வேட்டு, அவருக்கு கால் காசு தகுதி கூட இல்லை! வெளுத்துவாங்கும் ஐ.பெரியசாமி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 05, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.