Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 12, 2017

நீ டம்மி முதல்வர்: நான்தான் முதல்வர்! பன்னீரை பாடாய் படுத்தும் சசிகலா?



ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக, முதல்வர் பன்னீர்செல்வம் இருந்து வந்தார். ஜெயலலிதா, முதல்வர் பதவியில் இருந்து, விலக நேரிட்ட போது, பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். அந்தளவுக்கு இவர், ஜெயலலிதாவிடம் செல்வாக்கு பெற்றது, சசிகலா குடும்பத்தினருக்கு, அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
எனவே, பன்னீர்செல்வம் மீது, ஜெயலலிதாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்த சசிகலா குடும்பத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால் கடந்த, அ.தி.மு.க., ஆட்சி முடியும் நிலையில், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மீது, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.
ஜெயலலிதா மீண்டும் பன்னீர்செல்வத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நிதிஅமைச்சராக நியமித்தது சசிகலா தரப்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெ., மறைந்ததும், எடப்பாடி பழனிச்சாமியை, தற்காலிக முதல்வராக்க முடிவு செய்தனர்.
ஆனால், மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக, மீண்டும் முதல்வராக, பன்னீர்செல்வமே தேர்வு செய்யப்பட்டார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா பொதுச்செயலராக பதவியேற்க, பன்னீர்செல்வம் உறுதுணையாக இருந்தார். முதல்வர் என்பதையும் மறந்து, அவரது காலிலும் விழுந்தார். ஆனாலும், அவருக்கு சசிகலா உரிய மரியாதை வழங்கவில்லை என்று தெரிகிறது.
இது, பன்னீர்செல்வத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, மீனவர் பிரச்னை, ஜல்லிக்கட்டு பிரச்னை தொடர்பாக, அவர் பிரதமருக்கு கடிதம் எழுதினால், பதிலுக்கு சசிகலாவும் கடிதம் எழுதினார். மேலும், தன் கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியான பிறகே, பன்னீர்செல்வம் கடிதம் வெளியிடப்பட வேண்டும் என உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு செயலிலும், தன்னை அவமதிக்கும் வகையில், சசிகலா செயல்படுவது, முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
முதல்வர் பன்னீர்செல்வம், பல்வேறு துறைகளின் சார்பில், வட மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் புதிய தொழிற்சாலைகளை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் திறந்து வைக்கிறார்.
எப்போதும் இதுபோன்ற திறப்பு விழா நிகழ்ச்சிகள் தலைமை செயலகத்தில், முதல்வர் அறையில் நடைபெறும். ஆனால், அந்த அறையை பன்னீர்செல்வம் பயன்படுத்த கூடாது என, சசிகலா உத்தரவிட்டுள்ளதால், விழா வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக, தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.