Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 5, 2017

இனி தளபதியே தமிழ் நாடு: மக்கள் நாயகன் ராமராஜன் திமுகவில்



முன்னாள் முதல்வர் ஜெ., இறந்த பின் சசிகலா தலைமை மீது கடும் அதிருப்தி அடைந்த நடிகர் வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்தார்.
அதிமுகவில் இருந்து நிறைய மிரட்டல் வந்தது.போலீஸ் பாதுகாப்பும் போடப் பட்டது. அதைத் தொடர்ந்து ஆனந்தராஜ் அமைதியாகி விட்டார்.
நாஞ்சில் சம்பத் வெளிப்படையாகவே கட்சியில் இருந்து விலகி விட்டார். இன்னோவா காரையும் ஒப்படைத்தது விட்டார்.
நடிகர் செந்தில் இன்னும் எந்த அறிக்கையும் விடாமல் அமைதி காத்து வருகிறார். விந்தியா விலகி விட்டார். ராமராஜன் மட்டும் அம்மா இறந்த துக்கத்தில் நெஞ்சுவலி வந்து ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில்  தளபதி நேற்று பொதுக்குழுவில் தலைவராக தேர்ந்தெடுத்து விட்டார்.
இதில் உற்சாகம் அடைந்த ராமராஜன் தளபதியே இனி தமிழ் நாடு என்று அறிவித்து திமுகவில் இணைகிறார் என்கிற செய்தியை ஒரு வார இதழ் எழுதியுள்ளது.
ராமராஜன் இனி மேடைகளில் தளபதி புகழ் பாடுவார் என்று எதிர் பார்க்கலாம்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.