January 11, 2017
இனி வெற்றிடமல்ல, ஊசி நுழையும் சந்தில் கூட தமிழகத்திற்குள் நுழையமுடியாத நிலையில் பாஜக!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாஜக நிரப்பும் என வருகின்றனர் பாஜக முக்கிய புள்ளிகள் ( தமிழிசை பொன்னர்). தமிழகத்தில் அப்படியொரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அவர்களைத் தவிர வேறு எவரும் இதுவரை கூறவில்லை. மிக வலுவான கட்சிகளாக தமிழகத்தில் திமுக, அதிமுக இருக்கின்றன.ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக ஆகியிருக்கிறார்.
அதே போல, உடல் நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் ஓய்வெடுக்கும் நிலையில் திமுகவின் செயல் தலைவர் ஆகியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இரண்டு கட்சிகளுமே தமிழக மக்களின் ஆதரவைப் பெற்ற வலுவான கட்சிகளாக உள்ள நிலையில், வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அடிக்கடி கூறி வருகிறது பாஜக. இதே கருத்தை இந்தியா டுடே கலந்துரையாடலில் பங்கேற்ற மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவும் கூறியுள்ளார்.
ஒரு வேளை அப்படியே வெற்றிடம் இருந்தாலும் கூட அதை நிரப்பும் இடத்தில் பாஜக இருக்கிறதா? என்பதே கேள்விக்குறிதான்.தமிழக வாக்கு வங்கி அரசியலில் அனைத்துத் தொகுதிகளிலும் செல்வாக்கில்லாத பாஜக குமரி மாவட்டம் பகுதியில் மட்டும் வாக்குகள் பிரிந்தால் வெற்றி பெரும் நிலையில் உள்ளது. இதுதான் தேர்தல் அரசியலில் பாஜகவின் நிலை, இது போக, நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அறிவித்த பின்னர் நாடு முழுக்க மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியும் துயரமும் இன்னும் தீரவில்லை.
தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக பல விவசாயிகள் மரணமடைந்திருக்கும் நிலையில், காவிரி பாசனத்திற்கு தமிழகத்திற்கு தண்ணீர் விட மறுத்த கர்நாடக மாநிலத்தைப் போல மத்திய அரசும் நடந்து கொண்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று அறிவித்தது. இதுவும் பாஜக மீது பெரும் அதிருப்தி ஏற்பட காரணமானது. இப்போது ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் விதித்த தடையை நீக்க மத்திய அரசு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்ற அதிருப்தியில் பாஜகவுக்கு எதிராக போராட்டங்கள் திரும்பியுள்ளன.
இப்போது பொங்கல் விடுமுறை நாளை தேசிய விடுமுறை தின பட்டியலில் இருந்து நீக்கி விட்டு மகாசிவராத்திரியை விடுமுறை தினத்தில் சேர்த்திருப்பதன் மூலம் எரிகிற கொள்ளியில் எண்ணைய் ஊற்றியிருக்கிறது பாஜக.பண மதிப்பிழப்பு நடவடிக்கை துவங்கி பொங்கல் வரை மத்தியில் ஆளும் பாஜக அரசு மீதுள்ள அதிருப்தி, இனி வெற்றிடமல்ல ஊசி நுழையும் சந்தில் கூட தமிழகத்தில் நுழையமுடியாத நிலை பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது.
இனி வெற்றிடமல்ல, ஊசி நுழையும் சந்தில் கூட தமிழகத்திற்குள் நுழையமுடியாத நிலையில் பாஜக!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 11, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.