January 31, 2017
கல்லால் முகம் சிதைக்கப்பட்டு, இளம் பெண் கொலை
டெல்லிக்கு அருகே மங்கோல்புரி பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கல்லால் நசுக்கி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமணமாகி ஒரு மாதமே ஆன ஆர்த்தி (30) என்ற பெண், நேற்று இரவு 8.30 மணியளவில் மங்கோல்புரி பகுதியில் உள்ள பூங்காவில் பிணமாக மீட்கப்பட்டதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை, தொடர்பாக மங்கோல்புரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆர்த்தியின் கணவர் என்று ஒரு நபர் காவல் நிலையத்தை தொடர்புக் கொண்டதாகவும், அவர் தனது மனைவியை கொன்றுவிட்டு பூங்காவில் புதைத்திருப்பதாக தகவல் அளித்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். அந்த தகவலின் பெயரில் பூங்காவிற்குச் சென்ற போலீசார் ஆர்த்தியின் சடலத்தை மீட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்த பகுதியில் ரத்தக்கறை படிந்த கல் இருந்ததாகவும், அதை கொண்டு தான் கொலையாளி ஆர்த்தியின் முகத்தை சிதைத்து கொடூரமாகக் கொலை செய்ததாகவும் போலீசார் கூறினர்.
தற்போது, ஆர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, பின்னர் அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்று மங்கோல்புரி காவல் அதிகாரி கூறினார்.
இதனிடையே, தப்பியோடிய ஆர்த்தியின் கணவரை போலீசார் தீவிரமாக தேடும் வருதாகவும், ஆர்த்தியின் நண்பர்கள், குடும்பத்தார், மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
கல்லால் முகம் சிதைக்கப்பட்டு, இளம் பெண் கொலை
Reviewed by மறத்தமிழன்
on
January 31, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 31, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.