January 26, 2017
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நடுக்குப்பம் மக்கள் : வேலியே பயிரை மேய்ந்ததால் கடும் மன உளைச்சல்
குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்ற சென்னை மெரினாவுக்கு அருகே குடியிருந்தும், மகிழ்ச்சியடைய முடியாமல் மீனவ மக்கள் கடும் வேதனையிலும், சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர். போலீஸ் தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கும் அவர்கள் தற்போது வரை வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். காவல்துறையின் கடுமையான தாக்குதலுக்குள்ளான நடுக்குப்பம் மீனவ மக்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. காவல்துறையினர் நடத்திய மனிதாபிமானமற்ற, கண்மூடித்தனமான தடியடி ஆங்கிலேயர்கள் போட்ட வெறியாட்டத்தை தங்களுக்கு நினைவுப்படுத்தியதாக கதறுகின்றனர் மீனவ மக்கள்.
காவல்துறையினர் வைத்த தீயில் கடைகளையும், குடியிருப்புகளையும் இழந்து விட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்த அவர்கள், தங்களது வாழ்வை எப்படி துவக்குவது என தெரியவில்லை என புலம்பி தவிக்கின்றனர். இந்த ஆண்டு குடியரசுதினம் தங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை என அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். தங்களது குழந்தைகளையும் இந்த குடியரசு தினம் மகிழ்ச்சிப்படுத்தவில்லை என தெரிவித்தனர். இதே போல எரிந்து போன மீன் கடைகளால் துர்நாற்றம் ஏற்பட்டள்ளதாகவும், நோய் தொற்று ஏற்படுவதற்கு முன் இவற்றை அகற்றவும் கோரியுள்ளனர். நாடு முழுவதும் குடியரசு தின கொண்டாட்டங்கள் களை கட்டிய நிலையில், தலைநகர் சென்னை மெரினா கடற்கரைக்கு அருகேயுள் நடுக்குப்பம் மக்கள் தங்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறையினரால் சூறையாடப்பட்டதால் கடும் மன உளைச்சலில் சிக்கி தவிக்கின்றனர்.
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நடுக்குப்பம் மக்கள் : வேலியே பயிரை மேய்ந்ததால் கடும் மன உளைச்சல்
Reviewed by மறத்தமிழன்
on
January 26, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 26, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.