Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 22, 2017

போராட்டத்தில் பங்கேற்றவர் உயிரிழக்கவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்.. போராட்டக்காரர்கள் வேண்டுகோள்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஒருவர் இன்று மயங்கி விழுந்து மரணம் அடைந்தார் என்ற செய்தி வெளியானது. தமுக்கம் மைதானத்தில் அப்படி யாரும் உயிரிழக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு வேண்டும் என்று மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கிய போராட்டம் தொடர்ந்து 5 நாட்களாக இரவு பகல் பாராமல் மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்த போதிலும், அதனையும் ஏற்காமல் நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று கூறி தமுக்கம் மைதானத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கு மக்களிடையே பெரிய அளவில் ஆதரவு குவிந்து வருகிறது.
இதனால் அக்கம் பக்கம் இருப்பவர்கள் தமுக்கம் மைதானம் சென்று தங்களுடைய ஆதரவைத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் போது 48 வயதான சந்திரமோகன் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தி வெளியானது.

இதற்கு போராட்டக்காரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் பங்கேற்ற யாரும் இறக்கவில்லை என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் போராட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.