January 14, 2017
இயக்குநர் கவுதமன் மீது தாக்குதல் நடத்தியதற்கு சீமான் கடும் கண்டனம்
ஜல்லிக்கட்டுக்கோரி மதுரை அவனியாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் கவுதமன் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கோரி மதுரை அவனியாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் கவுதமன் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அறவழியில் போராடியவர்கள் மீது அநாகரிகமாக தடியடி நடத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் ஆர்யா, இயக்குனர் அமீர், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இயக்குநர் கவுதமன் ஆகியோர் போராட்டம் நடத்தினர். அப்போது ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என அவர்வகள் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதற்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மற்றும் இயக்குநர் கவுதமன் ஆகியோர் மறுப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதையடுத்து அவர்கள் மீது காவல்துறையினர் சரமாரி தடியடி நடத்தினர். இயக்குநர் கவுதமனை போலீசார் விரட்டி விரட்டி தாக்கினர். இளைஞர்கள் மீதும் போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். அவர்களை தரதரவென் இழுத்துச்சென்று போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் இந்த தடியடி தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அறவழியில் போராடியவர்கள் மீது அநாகரிகமாக தடியடி நடத்தியதாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி பெற்றுத்தரவில்லை என்றும் சீமான் குற்றம்சாட்டினார்.
இயக்குநர் கவுதமன் மீது தாக்குதல் நடத்தியதற்கு சீமான் கடும் கண்டனம்
Reviewed by மறத்தமிழன்
on
January 14, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.