Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 10, 2017

விந்தணு தானம் பெற்று குழந்தை பெறும் ஐரோப்பாவின் முதல் ஆண்



20 வயதான ஹைடன் கிராஸ் இப்போது ஐரோப்பாவின் ஹாட் டாபிக். இவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர். பெண்ணாகப் பிறந்த இவர்  தான் பருவ வயதை அடைந்ததும், தனக்குள் ஏற்பட்ட பாலுணர்வு மாற்றத்தால், ஹார்மோன் மாத்திரைகள் மற்றும் ஊசிகள் மூலமாகத் தனது உருவத்தையும் குரலையும் ஆண் போல மாற்றிக்கொண்டார்.
தனது பெற்றோரின் பிரிவுக்குப் பின்னர், 3 வருடங்கள் வேலை இல்லாமல் அரசு காப்பகத்தில் வாழ்ந்து வந்த ஹைடன்,  வாழ்க்கையில் வெறுமையை உணர்ந்தார். தனக்கென்று ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தார். இன்னும் முற்றிலும் ஆணாக மாறாத ஹைடனின் உடலில் பெண்ணின் கருப்பையும் மார்பகங்களும் உள்ளன.
இந்த கருப்பையில் விந்தணு செலுத்தினால், கருவைத் தாங்கும் அளவுக்கு உறுதியாக உள்ளது. இதற்காக விந்தணு தானம் பெற சமூக வளைதளமான ஃபேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்தார். இதனைக் கண்டு தனது விந்தணுவை தானம் செய்ய முன்வந்த ஒரு நபரிடம் தானம் பெற்ற நிலையில், விந்து ஹைடனின் கருப்பைக்குள் செயற்கை முறையில் செலுத்தப்பட்டது.
இதனையடுத்து ஹைடன் வெற்றிகரமாகக் கரு தரித்துள்ளார். இப்போது  ஹைடன் கர்ப்பமாகி நான்கு மாதங்கள் ஆகின்றன. இதன்மூலமாக 'குழந்தை பெறவிருக்கும் ஐரோப்பாவின் முதல் ஆண்' எனப்பெயர் பெற்றுள்ளார் ஹைடன்.    

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.