Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 22, 2017

புதுக்கோட்டை அருகே அமைச்சர் நடத்திய அவசர ஜல்லிக்கட்டில் விபரீதம்.. மாடு முட்டி இளைஞர் சாவு


புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் கிராமத்தில் அவசரமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டின்போது மாடு முட்டி இளைஞர் பலியாகியுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. எனவே இன்றே ஜல்லிக்கட்டு நடத்த, அரசு அவசரம் காட்டியது. மக்களோ நிரந்தர சட்டம் கேட்டு போராடுகிறார்கள். நாளை சட்டசபை கூட்டத்தொடரில் நிரந்தர சட்டம் இயற்றப்படும் என முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை.


ஆனாலும், ஆங்காங்கு அமைச்சர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடக்கி வைத்தனர். முதல்வர் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தொடங்கி வைப்பதாக இருந்த நிலையில் மக்கள் எதிர்ப்பால் அவர் சென்னை திரும்பினார்.
ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், ராப்பூசல் கிராமத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில், மக்களின் எதிர்ப்புக்கு நடுவேயும் அவசரமாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

இந்த போட்டியின்போது மாடு முட்டியதில் மாடு பிடி வீரர் மோகன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் ஜக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

பொதுவாக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் போதிய ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். மருத்துவர்கள், அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் அளவுக்கான உபகரணங்கள் இருக்க வேண்டும். ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கரோ, 'மேலிடத்திற்கு' கணக்கு காட்டி நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் எதையும் ஆராயாமல் ஊர்மக்களை கட்டாயப்படுத்தி ஜல்லிக்கட்டு நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவசர சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்ற மிஞ்சிப்போனால் இன்னும் ஒருநாளே உள்ள நிலையிலும் கூட, அமைச்சர் இவ்வாறு அவசரப்பட்டு மக்களின் உயிரோடு விளையாடியது எந்த விதத்தில் நியாயம் என மக்கள் குமுறுகிறார்கள். இந்த உயிரிழப்பு சம்பவத்தால் அரசு மீது மக்கள் அதிருப்தியிலுள்ளனர். உரிய ஏற்பாட்டுடன் விளையாட்டு நடந்திருந்தால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று அவர்கள் பொறுமுகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.