சென்னை,
ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அ.தி.மு-.க. பொதுச் செய லாளர் பதவியை அவரது தோழி சசிகலா ஏற்றுள்ளார்.இதனால் அ.தி.மு.க நிர்வாகம் முழுமை யாக சசிகலாவின் கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வரப் பட்டுள்ளது.
சசிகலா தலைமையை ஏற்க மறுத்து அதிருப்தியுடன் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகள் தற்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரிக்கத்தொடங்கி உள் ளனர். சென்னை தியாக ராயநகர் சிவஞானம் தெருவில் வசித்து வரும் தீபா இது வரை நேரடி அரசியலில் ஈடுபட்டதில்லை.
ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த போது அவரை பார்க்க அனுமதிக் கப்படாத தால் தீபா பரபரப்பு குற்றச் சாட்டுக்களை வெளியிட் டார். ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை வெளியிட வேண்டும் என்றுதீபா வலியுறுத்தி வருகிறார்.
இதன் காரணமாக அ.தி.மு.க நிர்வாகிகளில் சிலரது பார்வை தீபா மீது திரும்பியுள்ளது.அவர்கள் தீபாவை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
தீபாவை பார்ப்பதற்காக அ.தி.மு.க வினர் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தினமும் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று கடலூர், வேலூர், சேலம் மாவட்டங்களைச் சேர்ந் தவர்கள் நூற்றுக்கணக்கில் தீபா வீடு முன்பு திரண்டனர். அவர்கள் தீபாவை வாழ்த்தி கோஷமிட்டனர்.
ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் என்பதால் நீங்கள் தான் அ.தி.மு.க வை வழி நடத்த முன் வர வேண்டும் என்றும் அவர்கள் குரல் எழுப்பினார்கள். தீபா முதலில் தன்னை சந்திக்க வருவதை தவிர்க்கும் படி கோரிக்கை விடுத்தார். போஸ்டர்கள் அச்சடித்து ஒட்ட வேண்டாம் என்றும் கூறினார். ஆனால் அதை அ.தி.முக தொண்டர்கள் ஏற்கவில்லை.
தீபா படம் போட்ட பெரிய, பெரிய போஸ்டர்களை வைத்து வருகிறார்கள். இன்றும் தீபாவை பார்க்க நிறைய பேர் வந்தனர்.
தொண்டர்களின் வாழ்த்து கோஷத்தால் மனம் நெகிழ்ந்த தீபா நேற்றும் இன்றும் தனது வீட்டின் மாடியில் உள்ள பால்கனிக்கு வந்து தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். ரெட்டை இலை சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் அவர் இரண்டு விரல்களைக் காட்டிய போது தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
அ.தி-.மு.க தொண்டர்களின் தொடர் ஆதரவு காரணமாக தீபாவின் மன நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக கூறப் படுகிறது. அவர் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இது தொடர் பாக அவர் கூறியதாவது:-
உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவை விரைவில் நான் அறிவிப்பேன்.
இன்னும் நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. எனது எதிர்கால நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதை சில வாரங்களில் தீர்மானிப் பேன். 2 அல்லது 3 வாரங் களில் எனது முடிவு என்ன என்பது தெரிந்து விடும்.
ஜெயலலிதாவுக்கு அளிக் கப்பட்ட சிகிச்சை விபரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன். என்னைப்பற்றி தற்போது வரும் தகவல்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலேயே உள்ளன. அரசியலில் ஈடுபடுவது பற்றி ஓரிரு வாரங்களில் தெளிவாக சொல்லிவிடுவேன். இவ்வாறு தீபா கூறினார்.
இதற்கிடையே ஜெயலலிதா மரணம் காரணமாக காலி இடமாகஅறிவிக் கப்பட்டுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் இன்னும் சில மாதங்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் சசிகலா போட்டி யிடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அவர் போட்டியிடும் பட்சத்தில் அவரை எதிர்த்து தீபாவை களம் இறங்க செய்ய முயற்சி நடக்கிறது. இதற்காக அ.தி.மு.க நிர்வாகி களில் சிலர் ரகசியமாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.