Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 2, 2017

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு கூடுதல் கால அவகாசம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு


செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு கடந்த டிசம்பர் 30–ந் தேதியுடன் முடிவடைந்தது. அதன்பிறகும் அந்த நோட்டுகளை வைத்து இருப்பவர்கள் வருகிற மார்ச் 31–ந் தேதிக்குள் பிரமாண பத்திரத்துடன் ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்து இருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும், தற்காலிகமாக வெளிநாடு சென்ற இந்தியர்களுக்கும் அந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி கூடுதல் கால அவகாசம் வழங்கி இருக்கிறது.

அதன்படி, கடந்த நவம்பர் மாதம் 9–ந் தேதி முதல் டிசம்பர் 30–ந் தேதி வரை வெளிநாட்டில் இருந்த இந்தியர்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வருகிற மார்ச் 31–ந் தேதி வரையும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் வருகிற ஜூன் 30–ந் தேதி வரையும் ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளலாம்.

வெளிநாடுவாழ் இந்தியர்களை பொறுத்தமட்டில் அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் படி அவர்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தற்காலிகமாக வெளிநாட்டுக்கு சென்றிருந்த இந்தியர்கள் என்றால் எவ்வளவு ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்பதற்கு வரம்பு கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.