புதுடெல்லி,
தேசிய பாதுகாப்பு படையின் அதிகாரபூர்வ வலைதளம் இன்று ஹேக் செய்யப்பட்டதுடன் பிரதமர் மற்றும் இந்தியாவுக்கு எதிரான செய்திகளை அனுப்பியுள்ளது கண்டறியப்பட்டது.
இதில் பாகிஸ்தான் தொடர்புடைய ஹேக்கர்கள் ஈடுபட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
இது பற்றி அதிகாரிகள் கூறும்பொழுது, ஹேக்கிங் முயற்சி இன்று கண்டறியப்பட்டவுடன், அதற்கான வலைதள முகவரியான www.nsg.gov.in உடனடியாக தீவிரவாத தடுப்பு படையினால் அதன் தலைமையகத்தில் வைத்து முடக்கப்பட்டது.
அந்த ஹேக்கர்கள் அலோன் இன்ஜெக்டர் என தங்களை அடையாளம் காட்டியுள்ளனர். அவர்கள் வலைதளத்தின் முகப்பு பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்டுள்ளனர். இந்த ஹேக்கிங் முயற்சியானது பாகிஸ்தானுடன் தொடர்புடைய ஹேக்கர்களால் நடத்தப்பட்டிருக்க கூடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுபற்றி உண்மையான விவரங்களை உறுதி செய்யும் முயற்சியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு படையின் தலைமையகத்தில் வலைதளம் பராமரிக்கப்பட்டு வந்ததுடன், படை, அதன் பூர்வீகம், நடவடிக்கைகள் பற்றிய அடிப்படை தகவல்களையும் வழங்கி வந்துள்ளது.
இந்த ஹேக்கிங் தகவல், தேசிய தகவல் மையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வலைதளத்தினை சரி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீவிரவாத தடுப்பு மற்றும் கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசின் அமைப்பு ஆக கடந்த 1984ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு படை தொடங்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.