Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 6, 2017

இரண்டாவது குழந்தை... வேண்டுமா... வேண்டாமா? உங்கள் மனசு என்ன சொல்கிறது? பெற்றோர்களுக்கு ஒரு சர்வே


பெய்ஜிங்,

அணுஆயுதம் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் விவகாரங்களில் இந்தியா ஐ.நா.வின் வரம்புகளை மீறுகிறது என்ற சீனாவின் அரசு மீடியா இந்தியாவை விமர்சனம் செய்து உள்ளது.

சீனா முழுவதையும் இலக்காக கொண்ட அக்னி - 4, அக்னி - 5 ஏவுகணை சோதனைகளை இந்தியா வெற்றிகரமாக முடித்ததை தொடந்து சீனா கிலியில் உள்ளது.

இந்நிலையில் சீனாவின் அரசு மீடியா குளோபல் டைம்ஸ் வெளியிட்டு உள்ள கட்டுரையில், “ஆணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தயாரிப்பில் இந்தியா ஐ.நா.வின் வரம்பை மீறுகிறது,” என்று கூறிஉள்ளது. அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நாடுகளும் தங்களுடைய அணுசக்தி திட்டங்களுக்காக விதிமுறைகள் வளைத்து உள்ளது. இந்தியா அதனுடைய அணுஆயுத திட்டங்களில் திருப்தி அடையாது, உலகின் எப்பகுதியையும் தாக்கும் திறன் கொண்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிக்க முயற்சிக்கிறது மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிறந்த உறுப்பு நாடுகளின் சம அந்தஸ்துடன் தரையிறங்கலாம் என்று கூறிஉள்ளது.

அணு ஆயுத மற்றும் பொருளாதார சக்தியை கொண்டு உள்ள இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிறந்தர உறுப்பு நாடுகள் குழுவில் இடம்பெறுவதற்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது என்றும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் நீண்ட தூரம் இலக்காக கொண்ட ஏவுகணைகளை இந்தியா தயாரிப்பதற்கு சீனா தடையை ஏற்படுத்ததாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துஉள்ள அக்னி - 4, அக்னி - 5 ஏவுகணைகள் சீனாவின் எந்த பகுதியையும் தாக்கும் திறன் கொண்டவை. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது. இருப்பினும் இந்தியாவின் தயாரிப்பு சீனாவிற்கு எந்தஒரு மிகப்பெரிய எச்சரிக்கையும் முன்வைக்கவில்லை என்றும் சீன பத்திரிக்கை கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியா சீனாவை முக்கிய எதிரியாக கருதாது என்றும் கூறிஉள்ள சின பத்திரிக்கை, இரு நாடுகளுக்கு சிறந்த தேர்வானது இணக்கமான உறவே என்றும் குறிப்பிட்டு உள்ளது.

இருப்பினும் நீண்ட தூரம் இலக்கினை கொண்ட ஏவுகணைகள் தயாரிப்பில் இந்தியா ஐ.நா.வின் வரம்பை மீறுகிறது என்று குற்றம் சாட்டிஉள்ள சீன பத்திரிக்கை, அணுஆயுத தயாரிப்பில் இந்தியா இப்போதைக்கு பெற்றுஉள்ள சலுகைகளை பாகிஸ்தானும் பெற வேண்டும், பாகிஸ்தானுக்கு சீனா துணை நிற்கும். பாகிஸ்தானுடன் சீனா அனைத்து விதமான உறவையும் கொண்டு உள்ளது, நீண்ட தொலைவு எல்லையாக கொண்ட ஏவுகணைகளை தயாரிக்க பாகிஸ்தானுக்கு சீனா உதவி செய்யும் என்று குறிப்பிட்டு உள்ளது.

உலகின் எந்த பகுதிக்கும் சென்று தாக்குதல் நடத்தும் வகையிலான ஏவுகணைகளை தயாரிப்பது இந்தியாவிற்கு எளிதற்றது கிடையாது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அனுமதித்தால், பாகிஸ்தானும் தன்னுடைய ஏவுகணைகளின் தாக்கும் தூரத்தை அதிகரிக்கும். உலகம் இதனை ஏற்றுக் கொண்டால் சீனாவும் அதனை மேற்கொள்ளும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை சோதனையானது வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பேசுகையில், ஐ.நா.வில் இதுதொடர்பான தீர்மானங்கள் தெளிவான விதிகளை கொண்டு உள்ளது என்று கூறிஉள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.