Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 7, 2017

அந்தமான் அருகே உருவான குறைந்தழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று பகுதியாக மாறியது


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிந்துவிட்டது. இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உள்ளது. அது வலுப்பெற்று நேற்று குறைந்தழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை அதிகாரிகளால் திட்டமிடப்பட்டது. ஆனால் அது நேற்று தாழ்வுப்பகுதியாகத்தான் இருந்தது.

இது குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:–

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகும். அதன் காரணமாக தமிழகத்தில் எந்தவித தாக்கமும் இருக்காது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மியான்மர் நோக்கி செல்லும். தமிழகத்தை பொருத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலைதான் நிலவும்.

இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.