Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 2, 2017

இளைஞர்கள் பயங்கரவாதத்தை நோக்கி செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் பெற்றோருக்கு, பிரதமர் மோடி அறிவுறுத்தல்


பிரதமர் மோடி நேற்று டெலிவிஷனில் தோன்றி நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது கூறியதாவது:-

பயங்கரவாதம், நிழல் உலக நடவடிக்கைகள், குற்றச் செயல்கள் போன்றவை அதிகரிப்பதற்கு கருப்பு பணம் மட்டும்தான் காரணம். எனவே தங்கள் வீட்டு இளைஞர்களை பெற்றோர்கள் மிகவும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டியது அவசியம் ஆகும். அப்போதுதான் அவர்கள் பயங்கரவாதத்தை நோக்கி செல்லாமல் தடுக்கப்படுவார்கள்.

மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக மாவோயிஸ்டு இயக்கத்தில் இணைந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த ஏராளமான இளைஞர்கள் அண்மைக்காலத்தில் தங்களது மனதை மாற்றிக் கொண்டு சட்ட அமலாக்க முகமைகளிடம் சரண் அடைந்து இருக்கின்றனர்.

காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களின் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு இந்த கல்வீச்சு சம்பவங்கள் நின்றுவிட்டன.

இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.