Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 19, 2017

500, 1,000க்கு தினமும் 3 சட்டம்; ஆனால் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் அநீதி தமிழர்களின் கேள்வி


கடந்த 3 நாட்களாக தமிழகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் ஜல்லிக்கட்டு அனுமதி கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, போராட்டத்தை கைவிட பல கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் இளைஞர்கள் முன்வைத்தனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் குறித்து பேசினார். ஆனால் பிரதமர் மோடி உச்சநீதிமன்றம் தான் முடிவு செய்யும் என கைவிரித்தார்.

இதனைத்தொடர்ந்து, போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என சமூக வலைத்தளங்களில் தெரிவித்துவருகின்றனர். போராட்டக்காரர்களின் ஒரு வாட்ஸ்அப் தகவலில், ரூ.500 மற்றும் ரூ.1,000க்கு தினம் 3 சட்டம் இயற்றுகிறார்கள். ஆனால், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற முடியாது என கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.