Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 5, 2017

கேஷ் லெஸ் இந்தியாவா? காந்தி லெஸ் நோட்டா? 2 ஆயிரம் நோட்டில் காந்தியை காணோம்


விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படம் இல்லாததால் அதிர்ச்சி!

மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேச மாநிலம் சியோப்பூரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியில் விவசாயிகள் பணம் எடுத்து உள்ளனர். விவசாயிகளுக்கு கிடைத்த புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெறவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் இந்த ரூபாய் நோட்டுகளை வங்கி அதிகாரியிடம் ஒப்படைத்து உள்ளனர். வங்கி அதிகாரிகள் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெறதா நோட்டுகள் போலியான நோட்டுகள் கிடையாது, அச்சடிப்பின் போது தவறு நேரிட்டு உள்ளது என்று கூறி வாங்கி வைத்துக் கொண்டு வேறு ரூபாய் நோட்டுகளை விவசாயிகளுக்கு வழங்கி உள்ளனர்.

 ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை அடுத்து அவசர அவசரமாக புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதினால் சில தவறுகள் நடைபெற்று வருகிறது, அதற்கு ஆர்பிஐ தெளிவான விளக்கத்தினை அவ்வபோது கொடுத்து வருகிறது.

எஸ்பிஐ வங்கி அதிகாரி ஆகே ஜெயின் பேசுகையில், “மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெறாமல் வந்த புதிய 2000 ரூபாய் நோட்டுகள் போலியானது கிடையாது, அச்சடிப்பில் தவறு நேரிட்டு உள்ளது, ரூபாய் நோட்டுகள் விசாரணைக்கு அனுப்பட்டு உள்ளது,” என்றார். புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெற்று உள்ள இடம் வெற்றிடமாக காணப்படுகிறது இந்நோட்டுகளில். மத்திய பிரதேச மாநிலம் திவாஸில் ஆர்பிஐக்கு சொந்தமான ரூபாய் அச்சடிப்பு மைத்திலேயே இந்நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.