January 23, 2017
இவர் வந்து தொடங்கி வைக்கதான் பிப்ரவரி 1ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு? பரபர பின்னணி
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வரும் 28ம் தேதி முதல்வராக பதவியேற்க திட்டமிட்டுள்ளதாகவும், அவர் அலங்காநல்லூர் வந்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்து மக்களிடம் நல்ல பெயரை பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வரும் 28ம் தேதி முதல்வராக பதவியேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அரசு அறிவித்திருந்தது. முதல்வர் பன்னீர் செல்வம் தானே நேரில் வந்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பதாக அறிவித்து அதன்படி மதுரைக்கும் வந்திருந்தார். ஆனால், அவசர சட்டம் போதாது, நிரந்தர சட்டம் தேவை என கூறி ஜல்லிக்கட்டு நடத்தவிடாமல் உள்ளூர் மக்களே தடுத்துவிட்டனர்.
உள்ளூர் மக்களே விரும்பும்போது, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துவிட்டு சென்னை திரும்பினார் பன்னீர்செல்வம்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வரும் 28ம் தேதி முதல்வராக பதவியேற்க திட்டமிட்டுள்ளதாகவும், அவர் அலங்காநல்லூர் வந்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்து மக்களிடம் நல்ல பெயரை பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவது என அலங்காநல்லூர் கிராம சபை முடிவெடுத்துள்ளதன் பின்னணியிலும் இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கான ரகசிய வேலைகள் நடந்துதான், இப்போது போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
இவர் வந்து தொடங்கி வைக்கதான் பிப்ரவரி 1ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு? பரபர பின்னணி
Reviewed by மறத்தமிழன்
on
January 23, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 23, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.