Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 25, 2017

ரயிலை சேதப்படுத்தியதாக 150 மாணவர்கள் மீது வழக்கு! தொடரும் மத்திய மாநில அரசுகளின் தமிழர் விரோத போக்கு!!...


ஜல்லிகட்டுக்கு அனுமதி அளித்திட வேண்டும், பீட்டா அமைப்பினை தடை செய்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில்  மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து  பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக காரைக்கால் சென்ற ரயிலை இளைஞர்கள், மாணவர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஐந்து நாட்களாக ரயிலை சிறைபிடித்த இளைஞர்கள் ரயில் செல்ல முடியாதபடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், ரயிலின் இன்ஜின் உள்பட பல்வேறு பகுதிகளில் சேதம் விளைவித்தனர். ரயில் பெட்டிகளில் உள்ள கண்ணாடிகள், ரயிலின் டீசல் டேங்க் ஆகியவற்றை உடைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஐந்து நாட்களுக்கு பிறகு கடந்த இரு தினங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, ரயிலை அங்கிருந்து மீட்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து ரயிலின் சேதம் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், போரட்டக் காரர்களால் சுமார் 2 கோடி ரூபாய் வரை சேதமடைந்து உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ரயிலை சேதப்படுத்தியதாக சிவக்குமார், மணி, அரவிந்த் மற்றும் 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ரயில்வே காவல்துறையினரின் சார்பில் ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு தற்போது சேலம் மாநகர காவல்துறைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இந்திய ரயில்வே பாதுகாப்பு சட்டத்தின் 147, 174, 150 ( 1 ) , 151 ஆகிய பிரிவின் கீழும், இந்திய தண்டனை சட்டத்தின் 147 பிரிவின் கீழ் என ஐந்து பிரிவின் கீழ் 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை சேலம் மாநகர காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். குறிப்பாக போராட்டம் நடைபெற்று வந்த சமயத்தில் காவல்துறையினரால் வீடியோ பதிவு செய்யப் பட்டதை கண்காணித்து, அதில் உள்ளவர்களை தேடும் பணி தீவிரமடைந்து உள்ளது.

இதற்கென ஐந்து காவல் ஆய்வாளர்களை கொண்ட ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படலாம் என்பதால் சேலத்தில் பரபரப்பு அதிகரித்து உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.