January 28, 2017
காவல்துறையை கண்டித்து கவுதமன், ராஜூமுருகன் - 11 தீர்மானம் நிறைவேற்றம் ( படங்கள்)
கடந்த திங்கள் அன்று மெரினாவில் சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் காட்டுமீராண்டி தனமாக மக்கள் மீது தாக்குதலை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழக உரிமைகளுக்கான அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் திரைப்பட இயக்குநர் கௌதமன், திருமுருகன் காந்தி, இயக்குநர் ராஜூமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த கண்ட ஆர்ப்பாட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. போராட்டத்தின் விளைவாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் உறுதிப்படுத்தபட வேண்டும். விலங்குகள் நலவாரியங்கள் அனைத்திற்கும் தடை விதிக்க வேண்டும். காங்கேயன் காளையை இளைஞன் அடுக்குவது போன்ற சிலையை மெரினாவில் நிறுவ வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். இறந்த 200 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு மத்திய அரசு வேலை வழங்க வேண்டும்.
தடியடி நடத்திய காவலர்களை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையால் கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
நதிநீர் ஒப்பதந்தங்களை மீறும் மாநிலங்களிடமிருந்து சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தை வஞ்சிக்கும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும். கூடங்குளம், மீத்தேன், நியுட்ரினோ வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். கச்சதீவை திரும்ப பெற வேண்டும்.
முருகன்,சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்ய வேண்டும்.
- இந்த 11 தீர்மானங்களை முதல்வரை நேரில் சந்தித்து கொடுக்க போகிறோம். பொய் வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் இல்லை என்றால் போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடாமல் போராடுவோம் என்று கவுதமன் தெரிவித்தனர்.
காவல்துறையை கண்டித்து கவுதமன், ராஜூமுருகன் - 11 தீர்மானம் நிறைவேற்றம் ( படங்கள்)
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 28, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.