Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 13, 2017

24 வயது பெண்ணை கூகுள் காப்பாற்றியது எப்படி?


தரமணி படத்தோட பாட்டுக்கு நடுவுல யாருக்காவது தற்கொலை எண்ணம் வந்தா, 104 என்ற எண்ணுக்கு கால் பண்னுங்கனு ஒரு வாய்ஸ் வரும். பாட்டுக்கு நடுவுல மெஸேஜ் சொல்லக்கூடாதானு கேட்டுருப்பாங்க. அதே மாதிரி ஒரு வேலையைத்தான் கூகுளும் பார்த்திருக்கிறது. சஹரான்பூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள இடத்தில் 24 வயது இளம்பெண் காதல் தோல்வியால் யமுனையாற்றின் துணைப்பாலங்களில் ஒன்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்ய நினைத்திருக்கிறார்.

ஆனால் கடைசி நேரத்தில் தற்கொலைக்கு மாற்று வழியை தேட முயற்சித்துள்ளார். அதற்காக அவர் உதவியை நாடியது கூகுள் தேடலைத்தான். கூகுளில்  ''how to commit suicide" என்று தேடியுள்ளார். அதற்கு கூகுள் அளித்த பதில் அவரது தற்கொலை எண்ணம் மாற காரணமாகியுள்ளது. கூகுள் தேடல் AASRA என்ற தற்கொலையிலிருந்து மீட்க உதவும் அமைப்பின் என்னை வழங்கியுள்ளது. அதன் மூலம் தனது தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டுள்ளார் அந்த பெண்.

இது குறித்து கூறிய அந்த பகுதியின் டிஐஜி ''ஒரு பப்ளிக் தொலைபேசி எண்ணிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அதன் எதிர்முனையில் ஒரு பெண் நடுக்கத்துடன் பேசினார். பின்னர் என் அலுவலகத்துக்கு வரவழைத்து பேசியதில் அவரது விவரத்தையும் கூறினார். ஒரு இளைஞனை காதலித்ததாகவும், அவனுக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது, அவர்கள் பெற்றோர் என் திருமணத்துக்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்று கூறியுள்ளார். பின்னர் இருவரையும் அழைத்து கவுன்சிலிங் தர சொன்னதாகவும் டிஐஜி கூறியுளார்.

இந்த பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றியது கூகுள் தேடல் தான். நாம் அனைத்துக்குமே கூகுளை தான் தேடுகிறோம். கூகுள் தேடலில் இது போன்ற சமூக அக்கறையுள்ள விஷயங்கள் இருப்பது ஆச்சர்யமளிப்பவையே. மேலும் இந்த விஷயத்தில் கூகுள் சிறப்பாக இயங்குகிறது. இதேபோல  “how to kill” என்று டைப் செய்தாலே அதன் பரிந்துரைகளாக கொசு, எலி, கரப்பான்பூச்சி என்ற பரிந்துரைகளையே முன்னிருத்துகிறது.

மேலும் ஒருவர் “how to commit suicide” என தேடினால் அவரது பகுதியுடன் அங்குள்ள மீட்பு மையத்தின் உதவிமைய எண் அளிக்கப்படுகிறது. கூகுள் தேடல் 24 வய‌து பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ளது. வெல்டன் கூகுள்...

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.