தமிழக முதலமைச்சராக பல்வேறு பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றியபோது தன்னுடைய ஒவ்வொரு பொறுப்பிலும் தனி முத்திரை பதித்தவர் அம்மையார் ஜெயலலிதா என்பது பாராட்டுக்குரியது மட்டுமின்றி சிறப்புக்குறியதாகவும் அமைந்திருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா நேற்றிரவு காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் மா.சுப்ரமணியன், ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி ஆகியோர் ஜெயலலிதா உடலுக்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து இன்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அனைவருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. அவரை இழந்து வாடிக் கொண்டிருக்கக் கூடிய அதிமுக தோழர்களுக்கும், தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், தலைவர் கலைஞர் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடக்கத்தில் சத்துணவு உயர் மட்டக் குழு உறுப்பினராக, ராஜ்ய சபை உறுப்பினராக, அதிமுகவின் பொதுச் செயலாளராக குறிப்பாக தமிழக முதலமைச்சராக பல்வேறு பொறுப்புகளை ஏற்று பணியாற்றிய போது தன்னுடைய ஒவ்வொரு பொறுப்பிலும் தனி முத்திரை பதித்தவர் அம்மையார் ஜெயலலிதா என்பது பாராட்டுக்குரியது மட்டுமின்றி சிறப்புக்குறியதாகவும் அமைந்திருக்கிறது. அம்மையார் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நான் துணை முதலமைச்சராக இருந்து பணியாற்றியிருக்கிறேன். அண்மையில் அவர் மீண்டும் முதலமைச்சராக தேர்வு பெற்று, தமிழக முதல்வராக இருந்த நேரத்தில் நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.

ஆகவே எந்த பிரச்னையாக இருந்தாலும் அதில் விடாப்பிடியாக இருந்து, அதனை நிறைவேற்றுவதில் தன் உணர்வை எந்த அளவிற்கு தொடர்ந்து அழுத்தமாக வெளியிட்டிருக்கிறார் என்பதை எண்ணி நாம் உள்ளபடியே அவருக்கு பாராட்டுதலை தெரிவித்தாக வேண்டும். ஆகவே அவரை இழந்து இன்றைக்கு தமிழக மக்களும், அவரது கட்சியைச் சார்ந்தவர்களும் எந்த அளவிற்கு வேதனையில் இருப்பார்கள் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அந்த வேதனையில், துயரத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் குறிப்பாக நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களும் தங்களுடைய உணர்வை வெளிப்படுத்துகிறார்கள்" என்று தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொண்டேன்" என்று கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.