ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த 75 நாட்களில் ஒரு நாள் கூட அவரை, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவால் சந்திக்க முடியவில்லை. முதல்வருக்கு கடந்த 4ம் தேதி இதயம் செயலிழந்துவிட்டது. இந்த தகவலைக் கேட்டு தீபா மருத்துவமனைக்கு வந்தார். அப்போதும் அவருக்கு போலீசார் அனுமதி தரவில்லை. ஜெயலலிதா இறந்துவிட்டார் என்று அறிவிப்பு வெளியான பிறகும் அவர் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஜெயலலிதாவின் உடல் மருத்துவமனையிலிருந்து போயஸ் தோட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, போயஸ் கார்டனில் சசிகலா குடும்பத்தினரும் அதிமுகவின் முக்கிய பிரமுகர்களும் இருந்தனர். வீட்டில் ஜெயலலிதாவின் உடலுக்கு சில சம்பிரதாய சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. அப்போது, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இறுதிச் சடங்கின்போது தான் இருக்க வேண்டும் என்று அங்கிருந்தவர்களிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், அவரை சசிகலாவின் நெருங்கிய உறவினர்களும், அவர்களுக்கு வேண்டிய சில போலீஸ் அதிகாரிகளும் கார்டனுக்குள் நுழைய விடாமல் தடுத்துவிட்டனர். ஜெயலலிதாவுக்கு இருக்கும் ஒரே ரத்த சம்பந்தம் அவரது அண்ணன் குடும்பத்தினர் மட்டுமே. அவர்களைக்கூட சம்பிரதாய சடங்குகளில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை.ெஜயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தபோது அவரது உடலுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையே அஞ்சலி செலுத்த வந்த தீபாவை ஒரு சில விநாடிகளில் அங்கிருந்து அகற்றினர். வேறு வழியில்லாமல் அவர் கட்சிப் பிரமுகர்கள் அமர்ந்திருந்த படியில் வந்து அமர்ந்துகொண்டார். ஜெயலலிதாவின் உடல் ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கிற்காக எம்ஜிஆர் நினைவிட வளாகத்திற்கு கொண்டு சென்றபோதும் ராணுவ வாகனத்தில் தீபாவுக்கு இடம் தரப்படவில்லை. அதே நேரத்தில் அவரது சகோதரர் தீபக், சசிகலாவுடன் சேர்ந்து இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு தனது அத்ைதக்கு அனைத்து இறுதிச் சடங்குகளையும் செய்து முடித்தார். அவரை காலையில் இருந்தே, நடராஜன் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டார். தன்னுடனேயே நிறுத்திக் கொண்டார். அவரை வெளியில் கூட விடவில்லை.
இந்த சம்பவங்கள் அனைத்தும் உலகம் முழுவதும் உள்ள மக்களால் தொலைக்காட்சிகள் மூலம் நேரலையில் பார்க்க முடிந்தது. இப்போது, ஜெயலலிதாவின் உண்மையான சட்டபூர்வ வாரிசு யார் என்ற கேள்வி மக்களிடமும், கட்சித் தொண்டர்களிடமும் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி. ஒருவருக்கு ஈமச் சடங்கு செய்ய அதிகாரம் தரப்படும் ரத்த சம்பந்த உறவினர்தான் சட்டபூர்வ வாரிசு என்பது பொதுவான கருத்து. அதுமட்டுமல்லாமல் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையும் அதுதான் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்த வகையில் ஜெயலலிதாவுக்கு ஈமச்சடங்குகளைச் செய்த அவரின் அண்ணன் மகன் மற்றும் அண்ணன் மகள்தான் சட்டபூர்வ வாரிசு என்று அதிமுகவினர் பேசி வருகிறார்கள். ஜெயலலிதாவின் சொத்துக்களை யார் நிர்வாகம் செய்யப்போகிறார் என்பது குறித்து அதிமுகவினர் மத்தியில் பல்வேறு விதமான கருத்துகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைத்துள்ளாரா, அதில் தனது அண்ணனின் குழந்தைகளுக்கு வாரிசு உரிமை வழங்கியிருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மறைந்தபோது, தனது சொத்துக்களை நிர்வாகம் செய்ய தனது வக்கீலான என்.சி.ராகவாச்சாரியைத்தான் நியமித்தார். அவருக்கு உதவி செய்ய தனது குடும்பத்தினர் சிலருக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். என்.சி.ஆர்.என சுருக்கமாக அழைக்கப்பட்ட மூத்த வக்கீல் என்.சி.ராகவாச்சாரிக்குப் பிறகு எம்ஜிஆரின் உறவினர் ராஜேந்திரனின் கட்டுப்பாட்டில் சொத்துக்கள் சென்றது. அதன் பிறகு தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் எம்ஜிஆரின் சொத்துக்கள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தால் ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமனின் நிர்வாகத்தின்கீழ் வந்துவிட்டது. இதற்கெல்லாம் மூலமாக இருந்தது எம்ஜிஆரின் உயில்தான். யார் வாரிசு, யார் சொத்துக்களை நிர்வாகம் செய்வது என்ற அதிகாரம் அந்த உயிலுக்கு மட்டுமே இருந்தது. இப்போதும், அதே பிரச்னைதான் எழுந்துள்ளது.
சொந்த வாரிசு என்று ஒருவரையும் ஜெயலலிதா வெளிப்படையாக அறிவிக்காமல் காலமாகியுள்ள நிலையில் ‘‘ சட்டபூர்வ வாரிசுகள் அவரின் அண்ணன் பிள்ளைகள் தீபா, தீபக் ஆகியோர் மட்டும்தான் ’ என்று தமிழக மக்களும், குறிப்பாக அதிமுகவினரும் பேச ஆரம்பித்துள்ளனர். ஜெயலலிதாவின் சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்துக்களை அவர் யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம். கேள்வி கேட்க முடியாது. அதே நேரத்தில் போயஸ் தோட்டம் அவரது தாயார் சந்தியா, வேதாச்சலம் முதலியாரிடம் 1967ல் வாங்கினார். அதற்கு ஜெயலலிதாதான் வாரிசு. ஆனால், அவரது அம்மா சந்தியா வாங்கிய சொத்து என்பதால் அவரின் 2வது வாரிசுகளான தீபக், தீபா ஆகியோருக்கு மட்டுமே சொந்தமாக முடியும். அவர்கள்தான் அந்த சொத்துக்களுக்கான வாரிசுரிமையைக் கோர முடியும். உயில் எழுதப்பட்டிருக்கும் பட்சத்தில் மற்ற சொத்துக்கள் அவர்களுக்கு தரப்பட்டிருந்தால் அவர்கள் அந்த சொத்துக்களுக்கு வாரிசாகலாம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும், இந்தப் பிரச்னை நீதிமன்றத்துக்கு சென்றால், நீதிமன்றத்தின் தீர்ப்புதான் பிரச்னையை இறுதி செய்ய முடியும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.