Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 3, 2016

நம்புங்க, முதல்வரை நான் பார்த்தேன்..! மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் ஒப்புதல்


தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் கே.ஆர். ராமசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரமுகர்கள் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை சந்தித்து, சட்டமன்ற குழுக்களை உடனடியாக அமைக்க கோரி மனு கொடுக்கச் சென்றனர். அப்போது, தி.மு.க பிரமுகர் துரைமுருகன் ஆளுநரிடம் பேசும்போது, "எழுபது நாட்களுக்கு மேல் ஆகிறது. ஜனநாயக நாட்டில் ஒரு முதல்வரை யாரும் சந்திக்க முடியவில்லை. எல்லாமே மர்மமாக இருக்கிறது..." என்று ஆரம்பித்திருக்கிறார்.

அப்போது குறுக்கிட்ட ஆளுநர், "நான் முதல்வரை சந்தித்தேனே?"  என்றாராம். இதை சற்றும் எதிர்பார்க்காத துரைமுருகன், மெல்லியதாக சிரித்திருக்கிறார். அதைக் கவனித்த ஆளுநர், "அட.. நான் கதவுக்கு வெளிப்புறம் இருந்தபடியோ... ஜன்னல் வழியாகவோ பார்க்கலை. அருகில் போய்ப் பார்த்தேன். அதன் பிறகுதான், ஒ.பி.எஸ்-ஸை நியமிக்கும் சிபாரிசுக்கு நான் அனுமதி அளித்தேன்" என்றாராம். மீண்டும் துரைமுருகனிடமிருந்து சிரிப்பு வெளிப்பட... கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாராம். வெளியில் வந்த பிறகு, எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களுக்குள் ரகசியமாக பேசிக்கொண்டார்களாம். ஆளுநர் சொன்னதை அவர்கள் நம்பவேயில்லையாம். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.