Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 25, 2016

பிரான்ஸில் உலகின் முதல் சோலார் ரோடு


சோலார் பேனல்களால் அமைக்கப்பட்ட முதல் சாலை பிரான்ஸில் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.

பிரான்ஸின் டவ்ரே பெர்சே நகரத்தில் 2,880 சோலார் பேனல்களால் அமைக்கப்பட்ட ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் செகோலின் ராயல் சமீபத்தில் திறந்து வைத்தார். சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சாலை கார்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்களின் எடையைத் தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.



இந்த சாலையின் மூலம் பெறக்கூடிய மின்சாரமானது 3,400 பேர் மக்கள் தொகை கொண்ட ஒரு கிராமத்தின் தெரு விளக்குகளுக்குத் தேவையான மின்தேவையைப் பூர்த்தி செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டு சோதனைக்கு பின்னர் இந்த ரோடுகள் நாடு முழுவதும் போடப்படும் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.