Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 28, 2016

லஞ்சம் வாங்கிய வேலூர் நில அபகரிப்பு பிரிவு DSP லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது



வேலூரில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய நில அபகரிப்பு பிரிவு DSP உஸ்மான் அலிகானை, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
தனது நிலத்தை அனுமதியின்றி விற்றதாகக் கூறி அஜய் உள்ளிட்ட 5 பேர் மீது நடவடிக்கைக் எடுக்குமாறு, ஆற்காடு பகுதியைச் சேர்ந்த குமரேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு பிரிவு DSP உஸ்மான் அலிகானிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரைப் பெற்ற உஸ்மான் அலி, ஒருவரை கைது செய்த நிலையில், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தனது கணவர் குமரேசன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சுஜாதா, லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு ADSP பாலசுப்ரமணியம், ரசாயனம் தடவிய பணத்தை குமரேசனிடம் அளித்து உஸ்மான் அலியிடம் வழங்குமாறு கூறியுள்ளனர். அதன்படி, பணத்தை வழங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், உஸ்மான் அலியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.