முதல்வர் ஜெ.,வுக்கு அப்போலோவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஜெயலலிதா குணமடைய அரசியல்கட்சி தலைவர்கள், பொதுமக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என அப்போலோ மருத்துவமனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. மேலும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆலோசனைப்படி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதோடு 3 விதமான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படுவதாகவும் திங்கள் அதிகாலைதான் எதையும் உறுதியாகத் தெரிவிக்க முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தற்போதைய நிலவரம் குறித்து ஆளுநர் விளக்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.