பிரதமரை சந்தித்துப் பேசிய பின்னர், ஒரு வாரத்துக்குப் பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீரென போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்தார்.
கடந்த 20-ம் தேதி டெல்லி சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஓ.பி.எஸ்., போயஸ் கார்டன் செல்லாமல் இருந்து வந்தார். இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் எதிர்ப்பைத் தொடர்ந்து போயஸ் கார்டனில் பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் சிலர் திரும்ப பெறப்பட்டதோடு, தனியார் காவலாளிகள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை, போயஸ் கார்டன் இல்லத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென வந்தார். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சசிகலாவுடன், ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்த வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழு வரும் 29-ம் தேதி கூட இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.