December 9, 2016
எந்த நேரத்திலும், எந்தப் பிரச்சனையானாலும் நாங்கள் இருக்கிறோம் - பிரதமர் மோடி
அஇஅதிமுக இதுவரை எங்களுக்கு, ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டின் மீதான பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் என Issue அடிப்படையிலான ஆதரவை அளித்து வந்தது. இது தொடர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என ”தி இந்து” நாளிதழுக்கு தகவல் மற்றும் தொலைதொடர்புத் துறை மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
”எந்த நேரத்திலும், எந்த விஷயத்திலும் நீங்கள் எங்கள் உதவியை நாடலாம்” என முதலவர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பிரதமர் மோடி கூறியதாகவும் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். அஇஅதிமுகவின் கொள்கை, பாஜகவுடன் கிட்டத்தட்ட ஒரேவிதமானது என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டனிலிருந்து ராஜாஜி ஹாலுக்கு ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துவரப்பட்டது. ராஜாஜி ஹாலில் இருந்து கடற்கரைக்கு எடுத்துச் செல்வதற்கான GUN Carriage ராணுவ வாகனம் இல்லாமல் தமிழக நிர்வாகம் என்ன செய்வதென்ற குழப்பத்தில் இருந்ததாகவும், கோயம்புத்துரில் இருந்து கொண்டு வருவதற்கு 6 மணி நேரம் ஆகலாம் என்றும், ஹைதராபாத்தில் இருந்த ராணுவ வாகனம் கொண்டு வரப்படுவதற்கு, மேலும் நேரம் எடுக்கலாம் என்பதால், பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரை அழைத்து இந்த விஷயத்தைக் கூறியவுடன், சிறப்பு விமானத்தில் ஒரு ராணுவ வாகனத்தை 11.30 மணியளவில் அவர் அதை அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த அவருடம் வருவதால், பாஜக அதிமுகவுடனான கூட்டணிக்கு முயல்கிறதா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, இது மிகவும் முன்கூட்டியதாகவே கேட்கப்படும் கேள்வி. பல சிக்கல்களில் அவர்கள் தங்கள் ஆதரவை பாஜகவுக்கு அளித்து வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணி போன்ற விஷயங்களை அல்லது மாற்றங்களைப் பொறுத்திருந்தே பார்க்கமுடியும்.
எந்த நேரத்திலும், எந்தப் பிரச்சனையானாலும் நாங்கள் இருக்கிறோம் - பிரதமர் மோடி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 09, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 09, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.