December 17, 2016
இந்தியாவை அதிர வைத்த அரசியல்வாதிகளின் பாலியல் சேட்டைகள்
அரசு அலுவலகத்தில் பெண்ணுடன் உறவு கொண்ட வீடியோ வெளியானதை அடுத்து கர்நாடக அமைச்சர் ஹெச்.ஒய். மேட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பணியிட மாற்றம் கேட்டு வந்த பெண்ணுடன் கர்நாடக கலால் துறை அமைச்சர் ஹெச்.ஒய். மேட்டி(71) அலுவலகத்தில் வைத்து உடலுறவு கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ கன்னட டிவி சேனலில் வெளியானது. இதையடுத்து மேட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பாலியல் புகாரில் அமைச்சர்கள் சிக்குவது ஒன்றும் புதிது அல்ல.
ஆபாச படம்
முன்னதாக கடந்த மாதம் மற்றொரு கர்நாடக அமைச்சரான தன்வீர் சேட் சர்ச்சையில் சிக்கினார். தன்வீர் சேட் அரசு விழாவில் தனது செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு அவரது கட்சியினர் ஆதரவு அளித்ததால் அவரது அமைச்சர் பதவி தப்பியது.
பாபுலால் நகர்
ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சர் பாபுலால் பாலியல் புகாரில் சிக்கினார். 2013ம் ஆண்டு அவர் தனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி படுக்கையை பகிர வைத்ததாக பெண் ஒருவர் புகார் தெரிவித்தார். இதையடுத்து பாபுலால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
ராகவ்ஜி லகம்சி சவாலா
தனது வீட்டு பணிப் பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கசமுசா செய்த மத்திய பிரதேச மாநில அமைச்சர் ராகவ்ஜி லகம்சி சவாலா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாகிவிட்டது. இந்த சம்பவம் 2013ம் ஆண்டில் நடந்தது.
கோபால் கந்தா
ஹரியானா அமைச்சர் கோபால் கந்தா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விமான பணிப்பெண் தான் தற்கொலை செய்யும் முன்பு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கந்தாவை பதவி விலக வைத்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கந்தா பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
என்.டி. திவாரி
2009ம் ஆண்டு ஆந்திர மாநில ஆளுநராக இருந்தபோது 3 பெண்களுடன் உல்லாசமாக இருந்து சிக்கினார் காங்கிரஸ் தலைவரான என்.டி. திவாரி. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மகிபல் மதர்னா
பன்வாரி தேவி பாலியல் தொல்லை பிரச்சனையில் சிக்கினார் ராஜஸ்தான் மாநில அமைச்சர் மகிபால் மதர்னா. பன்வாரி தேவி மாயமானதும் மதர்னா தான் அவரை கடத்தியதாக அந்த பெண்ணின் கணவர் புகார் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மதர்னாவின் பதவி பறிக்கப்பட்டது.
இந்தியாவை அதிர வைத்த அரசியல்வாதிகளின் பாலியல் சேட்டைகள்
Reviewed by மறத்தமிழன்
on
December 17, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 17, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.