Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 18, 2016

கருணாநிதியை சந்திக்க மருத்துவமனைக்கு வந்த வைகோ கார் மீது திமுகவினர் கல்வீச்சு!



உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக  தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க வந்த மதிமுக தலைவர் வைகோவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 

திமுக தலைவர் கருணாநிதி, தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.

பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இன்று மாலை மதிமுக தலைவர் வைகோ, கருனாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வருகை தந்தார். அப்போது அங்கே குவிந்திருந்த திமுக தொண்டர்கள் அவருடைய வாகனத்தை சூழ்ந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர், அவர்களின் எதிர்ப்பினால் வாகனத்தை திரும்புமாறு வைகோ உத்தரவிட்டார். இருந்த போதிலும் ஆத்திரத்தில் இருந்த தொண்டர்கள் சிலர் அவருடைய வாகனத்தை தாக்க முயன்றனர். அவருடைய வாகனத்தின் மீது கற்கள், காலணிகள் வீசப்பட்டன.

இதனால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டு, சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனிடையே வைகோ அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர், மதிமுக - திமுக தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

மு.க. ஸ்டாலின் கண்டனம்:

மருத்துவமனையில் தான் இல்லாத போது வைகோவுக்கு நேர்ந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்..

இது தொடர்பாக ஸ்டாலின் வெளிட்ட அறிக்கை:

“கலைஞர் அவர்களின் உடல் நலம் விசாரிக்க வந்த மதிமுக பொது செயலாளர் திரு வைகோ அவர்களை தடுத்து நிறுத்தியதை நான் கண்டிக்கிறேன். மருத்துவமனையில் நான் இல்லாத நேரத்தில் வைகோ அவர்களுக்கு நேர்ந்த இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன், திமுகவிற்கு எதிரான பிரச்சாரங்களில் யார் ஈடுபட்டு வந்ததாலும் கழக தோழர்கள் அவர்களுக்கு எதிராக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தலைவர் கலைஞர் அவர்களுக்கோ, எனக்கோ எக்காலத்திலும் உடன்பாடானது அல்ல.  கழகத்திற்கு எதிரான பிரச்சாரங்களை அரசியல் ரீதியாக ஜனநாயக முறையில் எதிர்கொள்ளும் சக்தி மிக்க தொண்டர்கள் நிறைந்த இந்த இயக்கத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கழக தோழர்கள் தவிர்த்து அமைதி காக்குமாறு கண்டிப்புடன்  கேட்டு கொள்கிறேன்”

டி.கே.எஸ். இளங்கோவன் வருத்தம்:

வைகோ கார் மீது நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வருத்தம் தெரிவித்தார்.

காவேரி மருத்துவமனை முன்பு செய்தியாளர்களை சந்தித்த போது  ”திமுக தொண்டர்களின் நடவடிக்கைக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம், நடந்த சம்பவத்துக்காக மு.க.ஸ்டாலினும் வருத்தம் தெரிவித்துள்ளார்” என டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.