December 21, 2016
ஆர்.கே .நகரில் தீபா களம் இறங்குகிறார்… ! குவியும் வாழ்த்துக்கள்..! ஜெ.,எனக்கும் அம்மா தான்..!!
முடிவுக்கு வந்து விட்டார் ஜெ.தீபா.
அத்தை விட்ட இடத்தில இருந்து அரசியலை ஆரம்பிக்கிறார். அதே முகம்,அதே குரல் வளம், அதே தைரியம்.அதே ஆளுமை.
இப்படி அநேக அதேக்கள் ஜெ.தீபாவிடம். மக்கள் திலகம் இறந்த போது அம்மா ஜெ.எப்படி அவமானப் படுத்தப்பட்டாரோ அதே அவமானம் அம்மா ஜெ., இறந்தபோது, இறந்த முகத்தைக் கூட பார்க்க விடாமல் அடித்து துரத்தியது சசி தரப்பு .
இதில் நொறுங்கிப் போனது தீபா மட்டும் அல்ல. அதை பார்த்துக் கொண்டிருந்த தமிழக மக்களும் தான்.
அந்த ஒரு புள்ளியில் துவங்கியது தீபாவின் அரசியல் வாழ்க்கை. பேசாமல் அவரை ஒரு முறை பார்க்க அனுமதித்திருக்கலாம்.
அவர் பாட்டிற்கு தனது பத்திரிகை தொழிலை பார்த்துக் கொண்டு போயிருப்பார். இப்போது சசி தரப்பிற்கு பெரும் தலைவலியாய் ஆகி விட்டார் தீபா.
இப்போது ஆர்.கே. நகர் தொகுதியில் களம் இறங்க முடிவு செய்து விட்டார். அதிலும் டெல்லி,மற்றும் முதல்வர் ஆசியோடு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இவருக்கு பக்க பலமாக சசிகலா புஷ்பாவும் செலவு விஷயங்களை தென்னகத்து ஒரு பிரமாண்ட அண்ணாச்சியும் கவனித்துக் கொள்வார்கள் என்கிறார்கள்.
வாங்கம்மா..சின்னம்மா..என்று வரவேற்க ஆயத்தமாகிறார்கள் ஆர்.கே. நகர் மக்கள்.
ஆர்.கே .நகரில் தீபா களம் இறங்குகிறார்… ! குவியும் வாழ்த்துக்கள்..! ஜெ.,எனக்கும் அம்மா தான்..!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 21, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.