December 27, 2016
நான் தான் இப்போதும் "தலைமை செயலர்" ராவின் பேச்சுக்கு முதலமைச்சர் OPS விளக்கம் அளிக்க வேண்டும்: ஸ்டாலின்
முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவின் தன்னிலை விளக்கம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துகளை தெரிவித்தும் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியது:
வருமானவரித் துறை என்பது மத்திய அரசின் கீழ் அமைந்திருந்தாலும் அதற்கென தனி அதிகாரம், தனிச் சட்டம் இருக்கிறது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். ஏற்கனவே பலமுறை மத்திய அரசு அதிகாரிகளின் வீடுகளில், அவர்களது அலுவலகங்களில் எல்லாம் இது போன்ற சோதனைகள் நடந்திருக்கின்றது. அதுமட்டுமல்ல, தகுந்த உரிய ஆதாரங்களின் அடிப்படையில் தான் இந்த சோதனைகள் நடந்திருப்பதாக வருமானவரித் துறை அதிகாரிகளும் கூறுகிறார்கள். மத்தியில் இருக்கும் அமைச்சர் பெருமக்களும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த அடிப்படையில், ஆதாரம் இருந்த காரணத்தால் தான் தலைமை செயலகத்திலும் சோதனை நடந்ததாக செய்திகள் வருகிறது. அதைவிட முக்கியமாக, இப்போதும் நான் தான் தலைமை செயலாளர் என்று அவரது பேட்டியில் கூறியிருப்பதாக கேள்விப்பட்டேன். ஏற்கனவே சோதனை நடந்துக் கொண்டிருந்த போதே நான் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தேன். தலைமை செயலகத்தில் சோதனை நடத்தப்படுகிறது என்று சொன்னால், அதில் ஏதோ பெரிய மர்மம் இருக்கிறது, பூதாகரமான செய்திகள் வரப்போகிறது. எனவே, இதுகுறித்து முதலமைச்சராக இருக்கும் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தான் விளக்கம் சொல்ல வேண்டும் என்று அப்போதே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
இப்போதும் நான் சொல்கிறேன், நான் தான் தலைமை செயலாளர் என்று முன்னாள் தலைமை செயலாளர் இருக்கிறார் பேட்டி அளிக்கிறார் என்றால், இதற்கு முதல்வர் அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வருமானவரித் துறை சோதனையின் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை மத்தியில் இருக்கும் அரசு, பாரதீய ஜனதா கட்சி, வருமான வரித்துறை அதிகாரிகள் தான் பதில் சொல்ல வேண்டும்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக முதல்வராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களை சந்தித்து நீங்கள் கேள்வி கேட்காத செய்தியாளர்கள், இப்போதாவது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து, விளக்கங்களை கேட்டு, நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்' என கேட்டுக் கொண்டேன் இவ்வாறு அவர் கூறினார்.
நான் தான் இப்போதும் "தலைமை செயலர்" ராவின் பேச்சுக்கு முதலமைச்சர் OPS விளக்கம் அளிக்க வேண்டும்: ஸ்டாலின்
Reviewed by மறத்தமிழன்
on
December 27, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.