Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 26, 2016

மகமாயீ…மாரியாத்தா.. எந்த அரசியல் வாதிங்களும் நிம்மதியா தூங்கக் கூடாது..! ‘செய்வினை’ வைத்த மீனாட்சிபு



நாம் அனைவரும் ராம்குமாரை  சுத்தமாக மறந்து விட்டோம். ஆனால், ராம் குமாரின் குடும்பமோ,மீனாட்சிபுரம் மக்களோ, சமூகப்போராளி திலீபன் மகேந்திரனோ இன்னும் மறக்கவில்லை..
மறக்கவும்  மாட்டார்கள். திலீபன் மகேந்திரன் இன்றளவும் தனது முகநூல் நட்பு வட்டம் மூலம் நிறைய நிதி பெற்று துல்லிய கணக்கு வழக்குகளோடு ராம்குமார் குடும்பத்திற்கு கொடுத்து வருகிறார்.
அதே சமயம் மீனாட்சிபுரம்  மக்கள் தங்கள் வீட்டில் ஒருவரை இழந்து விட்டதாகவே எண்ணி இன்றளவும் அழுது கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு விஷயம் லீக் ஆகி பீதியை கிளப்பி வருகிறது. உண்மையா என்று விசாரித்தால் கமுக்கமாக இருக்கிறார்கள் மக்கள்.
ராம்குமார் இறந்த ஒருவாரம் கழித்து எங்க ஊருப்பிள்ளை சாவுக்கு நியாயம் கிடைக்கணும் “மகமாயீ..மாரியாத்தா ஒரு அரசியல்வாதிங்க கூட நிம்மதியா தூங்கக் கூடாது.
எங்க புள்ளக்கி நடந்த கொடுமைக்கு தகுந்த பதிலை சொல்லித்தான் ஆகணும்னு காசு வெட்டி போட்டாங்களாம் ஊர் மக்கள்.
காசு வெட்டிப் போடுதல் என்பது ஒரு கொடுமையான செய்வினை என்கிறார்கள் அந்த ஏரியா மக்கள். நீதி கிடைக்காமல் ராம்குமார் ஆத்மா சாந்தி அடையாது.
நாட்டில் நடப்பதைப் பார்த்தால் சகுனம் சரி இல்லை என்று தான் தோன்றுகிறது.
அப்போ செய்வினை உண்மையாத்தான் இருக்குமோ..?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.