Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 13, 2016

தீவிர புயலுக்கும் அதி தீவிர புயலுக்கும் என்ன வித்தியாசம்?



புயலாக உருவெடுத்த 'வார்தா' வலுவிழக்கும் என்று கருதப்பட்ட நிலையில், அதன் தீவிரம் பலமடங்கு அதிகரித்து அதிதீவிர புயலாக உருவெடுத்தது.

* தீவிர புயலுக்கும் அதி தீவிர புயலுக்கும் இடையேயான வித்தியாசம் காற்றின் வேகத்தைப் பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

* அதி தீவிரப் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ முதல் 130 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.

* அதே நேரத்தில் தீவிரப் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 80 கி.மீ முதல் 110 கி.மீ வேகத்தில் மட்டுமே பலத்த காற்று வீசும்.

இந்திய வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கைப் பிரிவு இதுகுறித்துக் கூறும்போது, ''அதி தீவிரப் புயலான 'வார்தா', தீவிரப் புயலாக மட்டுமே வலுவிழக்கும்.

* 'வார்தா' அதே நேரத்தில் புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 100- 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம் 120 கி.மீ. வரையிலும் அதிகரிக்கக்கூடும்" என்று கூறியுள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.