December 20, 2016
மிஸ்டர் மோடி கருப்பு பணம் எங்கே ?? சமானியனின் கதறல் !!
கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கியால் திருப்பப்பெறப்பட்ட 500 , 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பு சுமார் 12.44 லட்சம் கோடிகள் . இதே காலகட்டத்தில் ரிசர்வ் வங்கியால் அச்சடித்து விடப்பட்ட புதிய நோட்டுக்களின் எண்ணிக்கை வெறும் 4.61 லட்சம் கோடிகள் தான்.. அதாவது மக்கள் வங்கிகளில் செலுத்திய பணத்தின் மதிப்பை விட சுமார் 65% அளவுக்கு குறைவான அளவுக்கே ரிசர்வ் வாங்கி புதிய நோட்டை புழக்கத்தில் விட்டுள்ளது .. அதிலும் குறிப்பாக விடப்பட்டுள்ள புதிய நோட்டுக்களில் 90% 2000 நோட்டுக்கள் தான்..உண்மை இப்படி இருக்கும் பொது நாட்டின் பொருளாதாரம் எப்படி சீராகும்??
மேலும் இன்னும் மீதம் இருப்பதற்காக ரிசர்வ் வங்கியால் கூறப்படும் 500 , 1000 ரூபாய்கள் மதிப்பு சுமார் 3 லட்சம் கோடிகள் .. சில நாட்களுக்கு முன்னர் அரசியல் கட்சிகளின் கணக்கில் பழைய நோட்டுக்களை டெபாசிட் செய்யலாம் வரிவிலக்கு என்று வேறு அறிவித்தார்கள்.. இது ஓன்று போதும் கருப்பு பணங்களாக இருந்த அனைத்தும் டெபாசிட் செய்யபப்ட்டிருக்கும். அடுத்து மக்கள் எல்லாம் வங்கியின் வாசலில் சில ஆயிரம் ரூபாய்க்கு பல மணி நேரம் காத்திருக்கும் போது ரிசர்வ் வாங்கி அதிகாரிகளோ பிளாக்கில் பண முதலாளிகளுக்கு புது 2000 ரூபாய் நோட்டுக்களை 200 கோடி அளவுக்கு கொடுத்து கருப்பு பணத்தை ஒழிக்க பாடுபடுகிறார்கள்.. அதை போல பாஜக பிரமுகர்கள் கமிஷனுக்கு ஜோராக வியாபாரம் செய்கின்றனர்...
அடுத்து சுமார் 500 சோதனைகளை மோடி சர்க்கார் நடத்தியதாக கூறும் நிலையில் ஒரு ரெய்டு கூட இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் வீட்டிலும் இல்லை , அரசியல் வாதிகளின் வெட்டெட்டிலும் இல்லை 500 கோடிக்கு திருமணம் முடித்தவனின் வீட்டிலும் இல்லை .ஆனால் எதெற்காக ஒரு பொய்யய் கூறி மக்களின் வாழ்க்கை தரத்தை அழித்தார்கள் மக்கள் சுருக்குப்பையில் உள்ள பணத்தை கொள்ளையிட எதற்காக கறுப்புப்பணம் ஒழிப்பு என்ற போலியான கோசம் என்பது தான் இப்போது மக்கள் மனதில் உள்ள முக்கிய கேள்வி?? வழக்கம் போல மிஸ்டர் மோடியிடம் இருந்து இதற்கெல்லாம் பதில் கிடைக்காது.. மாறாக இன்னும் பல்வேறு சட்டங்களை போட்டு மீதமிருக்கும் மக்களின் வாழ்வையும் அழிப்பார்..
மிஸ்டர் மோடி கருப்பு பணம் எங்கே ?? சமானியனின் கதறல் !!
Reviewed by மறத்தமிழன்
on
December 20, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.