December 21, 2016
ஒருகல்லு மூன்று மாங்காய்........
ஒரு மாநிலத்தின் தலைமை செயலாளரை வருமான வரி சோதனைக்கு உட்படுத்துவது என்பது அத்தனை எளிதான காரியம் இல்லை. மத்திய அரசின் நேரடி அனுமதி இல்லாமல் இது நடக்க 1 சதவிகிதம் கூட வாய்ப்பில்லை.
சேகர் ரெட்டி சொன்ன விவரங்களை வைத்து தான் இந்த சோதனை நடக்கிறது என்பது மீடியாக்களில் வரும் அதிகாரபூர்வம் இல்லாத செய்தி. ஆனால் அப்படியே அது நடந்திருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மத்திய பிஜேபி அரசு தெளிவாக அரசியல் நகர்வுகளை செய்ய வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
இந்த சோதனை நடந்ததன் மூலம் சேகர் ரெட்டி, ராம மோகன் ராவ், பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகிய அனைவரையும் ஒரு வட்டத்திற்குள் மத்திய அரசு கொண்டுவந்துவிட்டது. மாநிலத்தின் தலைமை செயலாளர் ஊழலில் ஈடுபட்டிருந்தால் அது கண்டிப்பாக இது வரை நிதி அமைச்சராக இருந்து தற்பொழுது முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம் அவர்களுக்கு தெரியாமல் இருக்காது. தெரிந்தும் இது வரை அவர் தலைமை செயலாளராக தொடர்கிறார் என்று சொன்னால் கண்டிப்பாக இதில் பங்கு முதல்வருக்கும் உண்டு என்பதே நமக்கு தெரிய வருகிறது. மேலும் ஜெயலலிதாவுக்கே அரசியல் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்த சசிகலா அவர்களுக்கு தெரியாமல் பன்னீர் செல்வம் எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதால் அவருக்கும் இதில் கண்டிப்பாக தொடர்பு இருக்கலாம். மேலும் சசிகலா அவர்கள் சாதாரண பெண் அல்ல. அவர் பல கோடிகள் புரளும் கிட்டத்தட்ட 43 கம்பெனிகளின் முதலாளி.
ஒரு மாநிலத்தின் முதல்வர்,
அந்த மாநிலத்தின் தலைமை செயலாளர்,
இவர்கள் இருவரையும் இயக்கும், ஜெயலலிதாவுக்கே அரசியல் நுணுக்கங்களை கற்றுத்தந்த, 43 கம்பெனிகளின் முதலாளி சசிகலா ஆகிய அனைவரும் இதில் நன்றாக சிக்கி உள்ளார்கள். இனி இந்த விஷயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது மூவரையுமே பாதிக்கும். அப்போ இன்றோடு இந்த நடவடிக்கையை இழுத்து மூடிவிட்டால் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் எங்கள் பேச்சை கேட்கவில்லை என்றால் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து உங்களை சிக்க வைப்போம் என்று மத்திய அரசு இவர்கள் மூவரையும் மிரட்டினால்..?
இவர்கள் மூவரும் தங்களை காத்துக்கொள்ள மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக மாற மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அப்படி மாறினால் தமிழகத்தை ஆளுவது அதிமுகவாக இருக்காது பிஜேபியாக தான் இருக்கும். மாநிலத்தில் பிஜேபியின் அதிகாரம் அதிகரித்தால் என்ன நடக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இல்லை மத்திய அரசுக்கு அது போல எந்த எண்ணமும் இல்லை என்று பிஜேபி சொல்லுமானால் இந்த சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அடுத்ததாக இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சோதனை செய்து அதன் விவரங்களை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இதில் யார் என்ன செய்ய போகிறார்கள் என்பது போகபோக நமக்கு தெரியும். காத்திருப்போம்.
ஒருகல்லு மூன்று மாங்காய்........
Reviewed by மறத்தமிழன்
on
December 21, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.