Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 17, 2016

கட்சி உறுப்பினரே இல்லாத சசிகலா புஷ்பா எப்படி சசிகலாவுக்கு எதிராக வழக்கு தொடரலாம்? அதிமுக வாதம்



சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எப்படி அதிமுக பொதுச்செயலராக சசிகலா நடராஜனை தேர்ந்தெடுக்கக் கூடாது என வழக்கு தொடர முடியும்? என அக்கட்சியின் மூத்த வழக்கறிஞர் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நடராஜனை நியமனம் செய்ய தடை கோரி அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், கட்சி தொண்டர்களின் கருத்தை கேட்காமல் மூத்த நிர்வாகிகள் மட்டும் சசிகலா நடராஜனை பொதுச்செயலராக்க முடிவை எடுத்துள்ளதாகவும் இது கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பானது; ஆகையால் சசிகலா நடராஜனை அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இம்மனுவை நீதிபதி கல்யாணசுந்தரம் நேற்று விசாரித்தார். அப்போது சசிகலா புஷ்பா தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயன் ஆஜராகி வாதிட்டார்.
அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், சசிகலா புஷ்பா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவருக்கு இந்த வழக்கைத் தொடர உரிமை இல்லை. ஆகையால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி கல்யாணசுந்தரம் எந்தவிதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்காமல் அதிமுக, சசிகலா நடராஜன் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.